இன்றைய குறள்

Monday, July 12, 2021

யூரோ கால்பந்து கோப்பை 2021 இறுதி போட்டி

யூரோ கால்பந்து விளையாட்டிற்கான கோப்பை 2021 இறுதி போட்டியில், இங்கிலாந்து அணியும், இத்தாலி அணியும் பல பரிட்ச்சை மேற்கொண்டது.

கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒரு கோப்பையும் இங்கிலாந்து அணி வெல்லவில்லை. 2006ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றது இத்தாலி. இங்கிலாந்தின் சொந்த மண்ணில் நடைப்பெற்றத்தால், அவர்களுக்கு கூடுதல் பலம்.

ஆட்டம் ஆரம்பித்து 2வது நிமிடத்தல் இங்கிலாந்து அணியின் லூக் ஷா கோல் அடித்தார். இங்கிலாந்து இரசிகர்கள் மகிழ்ச்சியில், திலைத்தனர். இந்த யூரோ போட்டிகளில் லூக் ஷா அடித்த முதல் கோல் இதுவே.

இரண்டாம் பாதியில் இங்கிலாந்தை விட, இத்தாலியின் ஆதிக்கம் இருந்தது. 67வது நிமிடத்தில் லியனார்டோ போனுச்சி இத்தாலி சார்பாக கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், இரண்டு அணியும் 1-1 என்று சம நிலையில் இருந்ததால், எக்ஸ்ட்ரா டைம் என்ற கூடுதல் 30 நிமிடங்கள், ஆடும் நிலைக்கு ஆட்டம் சென்றது.

120 நிமிடங்கள் முடிவடைந்தும் இரு அணிகளும் 1-1 என்று இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் மூலம் முடிவு காணும் சூழலுக்கு இருந்தது

பெனால்டி ஷூட் அவுட்டில் இத்தாலி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று யூரோ 2021 கோப்பையை கை பற்றியது




No comments:

Post a Comment

பழமொழி