இன்றைய குறள்

Saturday, February 10, 2018

காப்பு

பட்டுப்போன ஒற்றை குச்சியை
உயிர்ப்பிக்க எத்தனிக்கும் கருமேகம்
விட்டுச்செல்லும் மழைத்துளிகளோடு
காத்திருந்த தருணம்,
கரு மேகம்,
பச்சை இலைகளை ஞாபகப்படுத்தும்
இயற்கையின்
புரட்சி தருணம்

==========================

தன்னை நோக்கி பாய்ந்த நீராவிகளை,
தடுத்து துளிகளாய்
ஜனித்து,
தொகுத்து
குவித்து
குளிர்வித்து
மண்ணிற்கு ஆதாரமான மழையை
வழங்கும் முன்,
மரணித்த கொம்பிற்கு
இறுதி சடங்காக
இந்த அலங்காரமோ!!!

Friday, January 26, 2018

நீர் கோலம்

தூரிகை காதல்...
நீரிலும் வட்ட ஓவியம் தீட்டிய கல்,
ஓவியம் நிரந்திரமாய் இராது
என்று தெரிந்தவுடன்
மூழ்கி தற்கொலை
செய்துகொண்டது!!
----------------------------------------------------
ஓவியத்தின் பித்து...
வரைந்த தூரிகை மூழ்கியதால்
தன்னை அழித்துக்கொண்டது
வட்ட ஓவியம்!!
----------------------------------------------------
ஆக்கமும் அழிவும்...
கண் இமைக்கும் நொடியில்,
தண்ணீர் மேல் வட்ட கோலமும்
வரைந்த கல்லின் மரணமும்!!
----------------------------------------------------
மைய முள்ளியில் அரங்கேறிய
ஜனனமும் மரணமும்.
----------------------------------------------------
அழகான கோலம் பிறக்க,
ஆதாரமாண கல் இறக்க,
அமைதியாய் நீர்!!!
எம் கண்களுக்குள்
ஊடுருவிய நிகழ்வு

Sunday, January 21, 2018

வெல்லும் பணநாயகம்

தன்னை அகலப்படுத்திக்கொள்ள

குடிசைகளை அகற்றிவிட்டு,
கம்பீரமாகவும்,
விசாலமாகவும்,

அடுக்ககங்கள் உள்ள இடத்தில்,
வளைந்தும்,
குறுகியும்,

பயணிக்கின்றன
சாலைகள்!!!!

Saturday, January 13, 2018

போகி 2018

வெள்ளைக்கோளம் பூண்ட மார்கழி,
தை மகளை வரவேற்க,
ஆங்காங்கே
சிவப்பும் இளமஞ்சலுமான
வண்ண தணலில்
தன்னை முடிக்கிறாள்.

போகியோ போகி

டும்டும்

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.