இன்றைய குறள்

Sunday, February 2, 2014

கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]

திரைப்படம்: ரம்மி
இசை: டி. இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்: பிரசன்னா, வந்தனாசீரினிவாசன்
ஆண்:
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

பெண்:
கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

பெண்:
சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்த
சலிக்காம சதி பண்ணுற
ஆண்:
சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
பெண்:
அதிகம் பேசமா அளந்து நான் பேசி
எதுக்கு சடபின்னுர
ஆண்:
சல்லிவேர ஆணி வேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
பெண்:
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற

ஆண்:
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
பெண்:
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன

ஆண்:
எங்கவேணா போய்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே
அது போதுமே
பெண்:
தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா
தருமாற தலசாயுமே
ஆண்:
மறைஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதான் சொந்தமே
பெண்:
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
ஆண்:
நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே

ஆண்:
கூடமேல கூடவச்சி கூடலூரு...கூடலூரு போறவளே
பெண்:
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
ஆண்:
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா
பெண்:
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா


1 comment:

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.