இன்றைய குறள்

Saturday, November 3, 2012

தூதுவளை இலை அரைச்சி பாடல் வரிகள்


படம்: தாய் மனசு 
பாடல்: தூதுவளை இலை அரைச்சி  
பாடியவர்கள்: எஸ். ஜானகி, எஸ்.பி.பி. 
thoothuvalai ilai araichchi lyrics 

பெண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா

தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடடும்
நான் காத்தாகி ஊத்தாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
ஆண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா

ஆண்:
நாள் தோறும் காத்திருந்தேன், நானே தவமிருந்தேன்
உனக்காக தான், கண்ணே உனக்காக தான்
பெண்:
நான் கூட மனசுக்குள், ஆசை வளத்துகிட்டேன்
உன்னை பார்க்கத்தான், மாமா உன்னை பார்க்கத்தான்
ஆண்:
அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலமோ
பெண்:
சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ
ஆண்:
எத்தனை நாள் இப்படி நான் ஏங்கிறது
பெண்:
பொட்டு வைச்சு பூ முடிக்கும் நாளிருக்கு

பெண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
 ஆண்:
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா

ஆண்:
ஊர் தூங்கும் வேலையிலும், நான் தூங்க போனதில்லை
உன்னால தான், கண்ணே உன்னால தான்
 பெண்:
யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம்
உன் பேரு தான், நித்தம் உன் பேரு தான்
 ஆண்:
இத்தனை நனப்பு என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ
 பெண்:
கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும் முன்னே முட்டிகொள்ளலாமோ
ஆண்:
முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்
பெண்:
சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்

பெண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
 ஆண்:
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
பெண்:
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
 ஆண்:
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடடும்
பெண்:
நான் காத்தாகி ஊத்தாகி
மாமனே தழுவி கட்டிக்கணும்

ஆண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா
பெண்:
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா


11 comments:

  1. இனிமையான பாடல்...

    பாடல் வரிகளுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Thanks to super singer junior season 9 and Meghana and mukkuthi murugan, made me repeatedly singing the song. Singing such type of songs with stage set up is so different

      Delete
    2. அருமை.அழகு

      Delete
    3. Yes sir. These two singers made me also listen frequently. Beautifully rendered

      Delete
  2. அருமையான பாடல் வரிகள் அதிலும்
    ஆன் பெண் பாடல் வரிகள் தனித்தனி வண்ணம் சிறப்பு

    ReplyDelete
  3. அருமை... எப்படி இந்தப்பாடலை இத்தனை வருடங்களாக கேட்காமல் இருந்தேன்...

    ReplyDelete
  4. பாடலாசிரியர் திரு கஸ்தூரிராஜா, படம் தாய்மனசு இசையமைப்பாளர் திரு தேவா திரைபடம் வந்த வருடம் 1986 இந்த பாடல் திரையில் பார்த்தால் கேவலமாக இருக்கும். பாட்டை படமாக்கிய விதம் சரியில்லை, டைரக்டருடைய தவறு.
    ஆனால் விஜய் டிவியில் SS JUNIORS எபிசோட் 9 ,10 ல் பாடிய மேக்னா சுமேஸ் என்ற சிறுமி பாடிய விதமும் , இசைஅமைத்த இசைகுழுவாலும் தான் பாடல் ஹிட் ஆகியது.இந்த பாடலை எழுதியவர் தனூசின் அப்பா கஸ்தூரிராஜா கவிதை பாடல் வரிகள் பிரமிப்பை உன்டாக்கியது.
    இந்த பாட்டை (மேக்னா சுமேஸ் பாடிய பாடலை) இதுவரை 100 தடவை கேட்டுவிட்டேன் திகட்டவில்லை. இசையமைப்பாளர் திரு தேவா சாருக்கு டியூன் போட்டமைக்கு சபாஸ்.
    மேக்னா சுமேஸ் தேவா சார் முன்னிலையிலும் பாடினாள் அவரும் இதை மிகவும் ரசித்து பாராட்டினார்.
    திரு தட்சிணா ஏகம்பரத்தை போல எனக்கும் எப்படி இதுவரை கேட்காமல் இருந்தேன் ஆச்சரியமாக இருந்தது.
    இளையராஜாவின் மிகப்பெரிய ஆளுமையும் இந்த பாட்டை மறைத்து விட்டது. ராஜா ராஜாதான்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக..இவர்கள் இருவரும் பாட்டை மெருகேற்றி கேட்க வைத்து விட்டார்கள்.அடிக்கடி..அருமையான குரல்வளங்கள்..தேனிசை தென்றல் அவர்களின் மென்மையான இசை ஞாலம்

      Delete
    2. இந்தப் பாட்டு பாக்கவும் நல்லாத்தான் இருக்கும்.. அப்படி ஒன்னும் கேவலமா இருக்காது..
      வேற பாட்ட கேவலமா சொல்லி இருக்கீங்க நீங்க..

      Delete

பழமொழி