இன்றைய குறள்

Thursday, January 1, 2015

இதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]

பாடல்: இதையத்தை ஏதோ ஒன்று
படம்: என்னை அறிந்தால்
பாடலாசிரியர்: கவிதாயினி தாமரை
பாடியவர்: சின்மயி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்


இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லை

கடல் அலை போலே வந்து
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின்வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது
எனை விட்டு மெதுவாய்
அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்பவில்லை
கனவுக்குள் கனவாய்
எனை நானே கண்டேனே

எனக்கு என்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று

எனக்கு என்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று

மலர்களை அள்ளி வந்து
முகிலுடன் கையில் தந்து
மனதினை பகிர்ந்திடவே
ஆசை கொள்கின்றேன்

தடுப்பது என்ன இன்று
தவிக்குது நெஞ்சம் இன்று
நதியினில் இலையென நான்
தோய்ந்து செல்கின்றேன்

அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சிணுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நாளும் மின்னுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சிணுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நாளும் மின்னுங்கும் மேல

இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடல் அலை போலே வந்து
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின்வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது
எனை விட்டு மெதுவாய்
அது போக கண்டேனே

இது ஒரு கணவு நிலை
கலைத்திட விரும்பவில்லை
கனவுக்குள் கனவாய்
எனை நானே கண்டேனே

எனக்கு என்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என்ன சொல்லும் நாளும் இன்று

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த மனசு சிணுங்கும் கீழ
அணையாத வைரம் போல
புது நாளும் மின்னுங்கும் மேல

1 comment:

 1. வணக்கம்
  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.