இன்றைய குறள்

Wednesday, May 29, 2013

ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்

படம்: தங்கமீன்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

4 comments:

 1. its a wonderful song by ANANTHA BABU FROM CHENNAI

  ReplyDelete
 2. தாங்க்ஸ் பார் சேரிங்

  ReplyDelete
 3. நான் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஆனந்த கண்ணீரில் மிதக்கிறேன்.
  காரணம் நானும் என் மகளும் இப்படிதான் இருக்கின்றோம்.
  எங்கள் உறவை தத்துறுவமாக உள்ளது இந்த பாடல்.
  நா.முத்துகுமருக்கு நன்றி அவர் ஆத்துமா எப்பவும் இறைவனுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  இவன் என்.கே.பொதுவிடை
  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
  ஆயக்காரன்புலம் 1
  வேதாரண்யம் வட்டம்
  நாகப்பட்டினம் மாவட்டம்

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.