கீழ்வானம் மட்டுமல்ல, நம்
தாய் பூமியும் சிவந்து போகும்
என்று உரக்கச்சொல்லும் சாதி சண்டை...
மழை தரும் மண்வாசனையை
இன்று கண்டிராத இளைஞர்கள்,
இரத்த வாடையால் மகிழ்ச்சி கொள்கின்றார்கள்....
உசுப்பெத்தும் அரசியவாதிகள்
சுகமாய் வாழ்கின்றார்கள்..
சிரித்து கொண்டே கை கோர்கின்றார்கள்
அடுத்த தேர்தலுக்காக.........
இலாபம் பார்க்கும் நோக்கத்தில் மட்டும்
வெற்றிகரமாக நடந்தேறிய கொலைகளில்
செந்நிறம் உடல் முழுவதும் பரவியதால்
அவர்களின் துணைவியார்கள் வெண்ணிற ஆடைக்கு
மாறுகின்றார்கள், சமாதம் தேவை என்பதற்காக....
கண்டிப்பாக பதில் சொல்லும் என்று
காலத்தின் கையில் விட்டுவிட்டு
நடத்தி முடிப்பது நம்
கடமை என்பதை மறந்தும் மறைத்தும்
/// காலத்தின் கையில் விட்டுவிட்டு
ReplyDeleteநடத்தி முடிப்பது நம்
கடமை என்பதை மறந்தும் மறைத்தும் ///
உண்மை...
படித்த முட்டாள்களும் படிக்காத முட்டாள்களும் திருந்தினால்தான் இந்த அவலங்கள் மாறும்...
ReplyDelete