இன்றைய குறள்

Friday, May 24, 2013

நில் நில் நில் நிலவே பாடல் வரிகள்

படம்: மத்தாப்பூ
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
இசை: சபேஷ் முரளி
பாடியவர்: கார்த்திக்




நில் நில் நில் நிலவே
நில் நில் நில் நிலவே
மௌனம் உனக்கு எதற்கு
அந்த மேகத்தில் திரை எதற்கு

நில் நில் நில் நிலவே
நில் நில் நில் நிலவே
மௌனம் உனக்கு எதற்கு
அந்த மேகத்தில் திரை எதற்கு
காதல் தேர்வு எழுத
அந்த விண்மீனில் எழுத்து எடுத்தேன்
காலை என்ன நடக்கும்
அடி கண்ணீரில் காத்திருப்பேன்
காதல் இருக்கும் வரை கண்ணீர் இருக்குமடி
கன்னங்கள் நனைத்தபடி

நில் நில் நில் நிலவே
நில் நில் நில் நிலவே
மௌனம் உனக்கு எதற்கு
அந்த மேகத்தில் திரை எதற்கு

பாவம் இந்த இதயம் இது ஒரு குழந்தை
என்ன சொல்லி தேற்றும் பொழுதும் அழுகிறதே
பெண்ணே உன்னை நினைத்து கனவுகள் வளர்த்து
தூக்கம் அதை தொலைத்து திரிகிறதே
காதோரம் அனுதினமும் நீ பேசும் குரல் இருக்கும்
உன் கண்ணில் விழும் வரைக்கும்
என் கண்கள் தவம் இருக்கும்
என்ன இருந்தும் என்ன உந்தன் நெஞ்சம் அதில்
பெண்ணே அடி நானும் இல்லை

நில் நில் நில் நிலவே
நில் நில் நில் நிலவே
மௌனம் உனக்கு எதற்கு
அந்த மேகத்தில் திரை எதற்கு

பெண்கள் மனம் கல் என்று சொன்னவனும் யாரடா
பெண்கள் மனம் கல்லும் இல்லை அதை திருத்து
தட்டி தட்டி உடைத்தால் எந்த கல்லும் உடையும்
கல்லைதாண்டி நிற்கும் இவள் விதிவிலக்கு
பெண் நெஞ்சம் கதவடைக்கும் பார்க்காமல் வலி கொடுக்கும்
ஆனாலும் தினம் தொடர்ந்து
ஆண் நெஞ்சம் படையெடுக்கும்
காலம் தோற்ற பின்னும் காதல் தோற்பதில்லை
நெஞ்சில் நினைவு இருக்கும்

நில் நில் நில் நிலவே
நில் நில் நில் நிலவே
மௌனம் உனக்கு எதற்கு
அந்த மேகத்தில் திரை எதற்கு
காதல் தேர்வு எழுத
அந்த விண்மீனில் எழுத்து எடுத்தேன்
காலை என்ன நடக்கும்
அடி கண்ணீரில் காத்திருப்பேன்
காதல் இருக்கும் வரை கண்ணீர் இருக்குமடி
கன்னங்கள் நனைத்தபடி

1 comment:

  1. ஆன்மா தழுவும் வரிகள் இசையும் குரலும் இதயத்தை மெ(மே)ன்மையாக்குகின்றன வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete

பழமொழி