இன்றைய குறள்

Tuesday, March 19, 2013

யாரோ இவன் யாரோ இவன் [பாடல் வரிகள்]

படம்: உதயம் 2013
பாடல்: யாரோ இவன் யாரோ இவன்
இசை: ஜி.வி. பிரகாஷ்





பெண்:
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்

ஆண்:
உன் காதலில் அலைகின்றவன்
உன் பார்வையில் உரைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

பெண்:
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

ஆண்:
எங்கே உன்னை கூட்டிசெல்ல
சொல்லாய் எந்தன் காதில் மெல்ல
பெண்:
என் பெண்மையும் இளைப்பாரவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஆண்:
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
பெண்:
மெதுவாக இதயங்கள் நனைகிறதே
ஆண்:
உன் கைவிரல் என் கைவிரல் கேட்க்கின்றதே

பெண்:
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேறோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்

பெண்:
உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
ஆண்:
உன் வாசனை வரும் வேலையில்
என் வாசனை ஏன் மாறுதோ
பெண்:
நதியினில் ஒரு இலை விழுகிறதே
ஆண்:
அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே
கரைசேருமோ உன் கைசேருமோ எதிர்காலமே

பெண்:
எனக்காகவே பிறந்தான் இவன்
எனைக்காக்கவே வருவான் அவன்
என் பெண்மையை வென்றான் இவன்
வருவான் அவன்
என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

No comments:

Post a Comment

பழமொழி