இன்றைய குறள்

Wednesday, March 20, 2013

விழி அருகே உன் விழி அருகே [பாடல் வரிகள்]



படம்: என் காதல் புதிது
பாடல்: விழி அருகே உன் விழி அருகே
இசை: சத்யா தேவ்
பாடியவர்: சௌமியா மகாதேவன்
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்







விழி அருகே உன் விழி அருகே 
என் வாழ்க்கையை வாழ்ந்திட தோன்றுதே 
விரல் அருகே உன் விரல் அருகே 
என் வழிகளை சேர்த்திட தோன்றுதே 
தோழன் என்பதா 
என் தாய் நீ என்பதா 
அன்பின் சாட்சியாய் இந்த கண்ணீர் வந்ததா 
நீ எந்தன் பிள்ளையாக நான் உந்தன் பிள்ளையாக 
காலங்கள் இப்படியே கண்மூடி உரையட்டுமே 

விழி அருகே உன் விழி அருகே
என்  வாழ்க்கையை  வாழ்ந்திட தோன்றுதே 
விரல் அருகே உன் விரல் அருகே 
என் வழிகளை சேர்த்திட தோன்றுதே 

என்னை வளர்த்தது என்றும் தனிமைகளே 
நீ வந்த பின் எங்கும்  இனிமைகளே 
என் தலையணை முழுதும் கனவுகளே 
அந்த கனவிலும்  உனது  நினைவுகளே 
கடிகாரத்தின் முள் போலவே 
உறங்காமலே  உன்னை தேடுவேன் 
மடி மீதிலே நீ சாய்கையில் 
மழை மேகமாய்  நான் மாறுவேன் 
என் நெஞ்சில் காதல் வந்து எனை எதோ செய்யுதடா 

விழி அருகே உன் விழி அருகே
என்  வாழ்க்கையை  வாழ்ந்திட தோன்றுதே 
விரல் அருகே உன் விரல் அருகே 
என் வழிகளை சேர்த்திட தோன்றுதே 

உன் நெருக்கத்தில் நெஞ்சம் படபடக்கும் 
நீ விலகினால் இன்னும் படபடக்கும் 
உன் சிரிப்பினில் கண்கள் கதை படிக்கும் 
உன் சுவாசத்தில் காதல் கலந்திருக்கும் 
இமைக்காமலே உன்னை பார்க்கிறேன் 
இதை தானடா நான் கேட்கிறேன் 
உனக்காகவே நான் வாழ்கிறேன் 
உனை நீங்கினால் உயிர் நீங்குவேன் 
எந்நாளும் உந்தன் காதல் எனக்காக வேணுமடா 

விழி அருகே உன் விழி அருகே
என்  வாழ்க்கையை வாழ்ந்திட தோன்றுதே 
விரல் அருகே உன் விரல் அருகே 
என் வழிகளை சேர்த்திட தோன்றுதே 
தோழன் என்பதா 
என் தாய் நீ என்பதா 
அன்பின் சாட்சியாய் இந்த கண்ணீர் வந்ததா 
நீ எந்தன் பிள்ளையாக நான் உந்தன் பிள்ளையாக 
காலங்கள் இப்படியே கண்மூடி உரையட்டுமே 


No comments:

Post a Comment

பழமொழி