இன்றைய குறள்

Wednesday, March 20, 2013

ஒரு வார்த்தை சொன்னாய் [பாடல் வரிகள்]


படம்: என் காதல் புதிது
பாடல்: ஒரு வார்த்தை சொன்னாய்
இசை: சத்யா தேவ்
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்



ஒரு வார்த்தை சொன்னாய்
ஒரு பார்வை பார்த்தாய்
இது போதும் போதும் போதுமடி
தொலைதூரம் போகும் அசைந்தாடும் மேகம்
எனைப்பார்த்து தூறல் போடுதடி
தேடிய செல்வம் நீயடி
வேண்டிய வரமும் நீயடி
தேவதை நீயே எந்தன் சொந்தமடி
காவிய காதல் நீயடி
காதலில் வீழ்ந்தவன் நானடி
உந்தன் அன்பே போதும் போதுமடி

ஒரு வார்த்தை சொன்னாய்
ஒரு பார்வை பார்த்தாய்
இது போதும் போதும் போதுமடி

நிமிடம் நீ வரும் நிமிடம்
எங்கும் பூப்பூவாய் பூ பூக்கும்
நிமிடம் நீ செல்லும் நிமிடம்
என்னை தீ தீயாய் தீ மூட்டும்
நானாக நான் நானில்லை ஏன் இந்த சலனம்
பெண்: காரணம் என்ன காதல் அதுதானே

ஒரு வார்த்தை சொன்னாய்
ஒரு பார்வை பார்த்தாய்
இது போதும் போதும் போதுமடி

பகலும் பௌர்ணமி இரவும்
உன்னை பார்த்தால் தான் அழகாகும்
இதயம் துடித்திடும் இதயம்
உன்னை சேர்ந்தால் தான் உயிர் வாழும்
பெண்: நானாக நானில்லை ஏன் இந்த மயக்கம்
காரணம் என்ன காதல் அதுதானே

ஒரு வார்த்தை சொன்னாய்
ஒரு பார்வை பார்த்தாய்
இது போதும் போதும் போதுமடி
தொலைதூரம் போகும் அசைந்தாடும் மேகம்
எனைப்பார்த்து தூறல் போடுதடி
தேடிய செல்வம் நீயடி
வேண்டிய வரமும் நீயடி
தேவதை நீயே எந்தன் சொந்தமடி
காவிய காதல் நீயடி
காதலில் வீழ்ந்தவன் நானடி
உந்தன் அன்பே போதும் போதுமடி

No comments:

Post a Comment

பழமொழி