இன்றைய குறள்

Tuesday, December 30, 2014

போகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]

படம் : பிசாசு
இசை: இளையராஜா
பாடியவர்: உத்தரா
வரிகள்: தமிழச்சி தங்கபாண்டியன்


போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அக ஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு

நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயுமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே

கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 1st intha song raja sir da song ea illa itha 1st purinjikonga

    ReplyDelete

பழமொழி