இன்றைய குறள்

Tuesday, December 30, 2014

கம்பு சப்பாத்தி

கம்பு சப்பாத்தி செய்முறை

தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு  - கிண்ணம்
கம்புமாவு             -  கிண்ணம்     
நல்லெண்ணெய்  - மேசை கரண்டி
உப்பு               - தேவையான அளவு




செய்முறை:
முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொள்ளவும்.

கோதுமை மாவு  மற்றும் கம்பு மாவு இரண்டையும் நன்றாக சலித்து கொள்ளவும். பின்னர் சலித்த மாவுடன் உப்பு கலந்து பிசையவும். இளம் சூடான தண்ணீர் மாவுடன் சேர்த்து பிசையவும். சிறிது பிசைந்தவுடன் நல்லெண்ணெய் மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிறகு 1 மணிநேரம் மாவை மூடி வைக்கவும்.

சப்பாத்தி மாவை எடுத்து வர மாவில் பிரட்டி சப்பாத்தி கல்லில் வைத்து மெதுவாக தேய்க்கவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்றாக சூடேற்றி கம்பு சப்பாத்திகளை இட்டு சுடவும் . சுவையான கம்பு சப்பாத்தி ரெடி.

கம்பு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:
செரிமான சக்தியை அதிகரிக்கும் கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ்  போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும். மேலும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும். உடல் வலிமையை அதிகமாக்கும். அது மட்டுமில்லாமல் தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும்.

1 comment:

பழமொழி