படம்: டார்லிங்
பாடல்: உன் விழிகளில் விழுந்து
பாடியவர்: ஹரிணி
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்ததும் ஏன் மறுபடி விழுகிறேன்
உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்
ஓர் நொடியும் உனை நான் பிரிந்தால்
போர்க்களத்தை உணர்வேன் உயிரில்
என் ஆசை எல்லாம் சேர்த்து
ஓர் கடிதம் வரைகிறேன்
அன்பே ....
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்ததும் ஏன் மறுபடி விழுகிறேன்
தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே
நான் உனை பார்கிறேன் அன்பே.....
சாரலாய் ஓர் முறை நீ எனை தீண்டினாய்
உனக்கது தெரிந்ததா அன்பே....
என் மனம் கானலின் நீர் என ஆகுமா
கைகளில் சேருமா அன்பே
பேசிக்கும் காலம்தான் வீணென போகுமா
நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே
பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே
பெண்களின் நெஞ்சம்தானடா
வண்ணத்து பூச்சியின் வண்ணங்கள் போலவே
ஆண்களின் நெஞ்சம்தானடா
வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும்
எண்ணங்கள் சேருமா அன்பே
வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதுதே
இதழ்களும் உள்ளதே இங்கே.
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்
No comments:
Post a Comment