இன்றைய குறள்

Tuesday, December 16, 2014

கம்பு இடியாப்பம் செய்முறை



தேவையான பொருட்கள் :

கம்புமாவு        -     2 கிண்ணம்
இடியாப்ப மாவு  -     1 கிண்ணம் 
நல்லெண்ணெய்  -     2 மேசை கரண்டி
உப்பு             -     தேவையான அளவு






செய்முறை:
முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொள்ளவும்.

கம்பு மாவு மற்றும் இடியாப்ப மாவு இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும் .
பின்னர் மாவை எடுத்து கட்டிகளின்றி சலித்து சுடு தண்ணீர் வைத்து இடியாப்பம் மாவு பதத்தில் பிசையவும். பிசைந்த பின் உருளை போல் உருட்டி வைத்துக்கொள்ளவும்.

இடியாப்பக் குழாயில் உருட்டி வைத்த மாவு உருளைகளை இட்டு இடியாப்ப தட்டில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான கம்பு இடியாப்பம் ரெடி. இவ்விடியாப்பத்தை வைத்து இனிப்பு இடியாப்பம் மற்றும் கார இடியாப்பம் போன்றவற்றை சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள். 

கம்பு இனிப்பு சேவை :

கம்பு இடியாப்பம்         - 1 கிண்ணம்

சர்க்கரை (அ) வெல்லம்   - 2 மேசை கரண்டி  
ஏலக்காய் தூள்            - 1 மேசை கரண்டி 
தேங்காய் துருவல்        - 3 மேசை கரண்டி  

செய்முறை:
முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொள்ளவும். கம்பு இடியாப்பம் மற்றும் சர்க்கரை , ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும் . சுவையான  கம்பு இனிப்பு சேவை ரெடி .



கம்பு கார சேவை :


கம்பு இடியாப்பம்     - 1 கிண்ணம்
கடுகு               - 1 மேசை கரண்டி
உளுத்தம்பருப்பு      - 1 மேசை கரண்டி
பொட்டு கடலை      - 1 மேசை கரண்டி
பச்சை மிளகாய்      - 2 மேசை கரண்டி
இஞ்சி               - சிறிய துண்டு 
எலுமிச்சை சாறு      -  1/2 மேசை கரண்டி 
கறிவேப்பலை        - சிறிது 
நல்லெண்ணெய்      - 2 மேசை கரண்டி
உப்பு                - தேவையான அளவு 

செய்முறை:
முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொள்ளவும். கடாயில் 2 மேசை கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை போட்டு சிவக்க வறுக்கவும். 
பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பலை, எலுமிச்சை சாறு, உப்பு, கம்பு இடியாப்பம் போட்டு நன்றாக கிளரவும்.

சுவையான  கம்பு கார சேவை ரெடி.



1 comment:

  1. வணக்கம்
    அருமையான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

பழமொழி