படம்: அநேகன்
பாடல்: தொடு வானம் தொடுகின்ற நேரம்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: ஹரிஹரன், சக்திஸ்ரீ கோபாலன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே.வி. ஆனந்த்
ஆண்:
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கம் ஆகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
பெண்:
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
ஆண்:
வலி என்றால் காதலின் வலி தான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப புதைக்கிறேன்
வலி என்றால் காதலின் வலி தான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப புதைக்கிறேன்
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
காதல் என்னைப் பிழிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பது தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினைத் தேடும் வேரினைப் போல
பெண்ணே உன்ன கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டு மூடும் போது
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது
லோகம் சூனியம் ஆகுதே
பெண்:
சிறு பொழுது பிரிந்ததுக்கே
பல பொழுது கதறிவிட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ
கண்கள் ரெண்டு மூடும் போது
ReplyDeleteநூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது
லோகம் சூனியம் ஆகுதே
கண்ணை முழுக்க திறந்ததே
லோகத்தின் சுகம் உணரவே !
வாழ்க