இன்றைய குறள்

Tuesday, November 25, 2014

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி [பாடல் வரிகள் - அநேகன்]


படம்: அநேகன்
பாடல்: ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: பவதாரிணி, திப்பு
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே.வி. ஆனந்த்

பெண்:
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதன் முதலாய் சிலுசிலுப்பு
முதுகுத்தண்டில் குறுகுறுப்பு
முழுவிவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
ஆத்தாடி

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா

ஆண்:
நீ மகுடத்தில் வைரக்கல்லு
நானோ மழபெஞ்ச உப்புக் கல்லு
உன்ன தொடவோ விரல் படவோ
ஒரு பொருத்தும் எனக்கேது
பெண்:
நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிபெட்டி
என்னை அடைக்க காத்துகிடக்க
உன்ன போல ஆளு ஏது
ஆண்:
ஆசைகள் இருந்தாக்கூட
மனம் மசியாது
ஆத்துல விழுந்தாக் கூட
நிழல் நனையாது
பெண்:
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது

ஆண்:
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்காளா
என் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்காளா

ஆண்:
கடிகாரம் முள்ளபோல
என்ன தினந்தோறும் சுத்திவாயா
என்ன துரத்து தூள் பறத்து
இந்த அள்ளிப்பூ கிள்ளிப்போயா
பெண்:
புளி மூட்டத்தூக்கிப் பாத்தேன்
இப்ப பூ மூட்ட தூக்கப் போறேன்
இளஞ்சிறுக்கி உன்ன முறுக்கி
என் அருணாக்கயிறாக்கப்போறேன்
பெண்:
இடுப்புல கயிறா கிடக்க மனந்தான் ஏங்குதையா
கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தமையா
ஆண்:
விழியால் தொட்ட அழகே
இந்த ஆச மாறாதே

பெண்:
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
ஆண்:
இது முதல் முதலாய் சிலுசிலுப்பு
முதுகுதண்டில் குறுகுறுப்பு
முழுவிவரம் எனக்கு சொல்வாயா

என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா

No comments:

Post a Comment

பழமொழி