இன்றைய குறள்

Saturday, November 3, 2012

பூவும் பூவும் பேசும் நேரம் பாடல் வரிகள்


படம்: ஆதலால் காதல் செய்வீர்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், வினைத்தா
வரிகள்: ஜே. பிரான்ஸிஸ் கிருபா

ஆண்:
பூவும் பூவும் பேசும் நேரம் 
தூறல் தூறும் ஜன்னல் ஓரம்
நின்றேன்னடி
போதும் போதும் என்ற போதும் 
தீயில் வாழும் தேவ போதை
தந்தாய்யடி 

என் தேவதை ஓஓஓ
இது மாயமோ சொல்
என் பூமியில் நான் இல்லையே
தேடி தேடி கண்கள் தேயுதே
வேறு பூமி செய்ய தோன்றுதே
கோடி கோடி மின்னல் என்னிலே பூபூக்குதே

பூவும் பூவும் பேசும் நேரம் 
தூறல் தூறும் ஜன்னல் ஓரம்
நின்றேன்னடி
போதும் போதும் என்ற போதும் 
தீயில் வாழும் தேவ போதை
தந்தாய்யடி

பெண்:
ஆயிரம் நாடகம் ஆடினாய் நீயடா
ஞாயமாய் காயத்தை செய்கிறாய்
ஆண்:
நாடகம் ஆடவே மேடையும் நீயடி
காற்றியிலே ஓவியம் வரைகிறாய்
பெண்:
தீராத பொய்கள் பேசியே
தித்திக்கும் இம்சை செய்கிறாய்
ஆண்:
பார்வையில் கத்திகள் வீசி நீ
நோகாமல் என்னை கொல்கிறாய்
பெண்:
அதனாலே நானும் இங்கே தூங்காத கடலுமானேன்
தாலாட்ட நீயும் வருவாய் அலையாய் அலையாய்

ஆண்:
பூவும் பூவும் பேசும் நேரம் 
தூறல் தூறும் ஜன்னல் ஓரம்
நின்றேன்னடி
போதும் போதும் என்ற போதும் 
தீயில் வாழும் தேவ போதை
தந்தாய்யடி


ஆண்:
சித்திரை மார்கழி சேர்ந்ததோ குத்தமே
செய்யவா செல்லமே உன்னிடம்
பெண்:
ஆ யாரிடம் கேட்கிறாய் நானில்லை என்னிடம்
வானவில் மாட்டலாய் ஆடுதே
ஆண்:
நீரின்றி வானில் வாழ்ந்திடும் 
ஓ விண்மீன்கள் மண்ணில் காண்கிறேன்
பெண்:
மேகத்தில் நீயும் வெண்ணிலா அஆ
தேகத்தில் என்ன காயுதா 
ஆண்:
உறங்காத இரவுகள் மேலே அடங்காத கனவுகளாலே
மிதந்திடும் பனித்துளி போலே, புதிதாய் பிறந்தேனே


பெண்:
பூவும் பூவும் பேசும் நேரம் 
தூறல் தூறும் ஜன்னல் ஓரம்
ஆண்: நின்றேன்னடி
பெண்:
போதும் போதும் என்ற போதும் 
தீயில் வாழும் தேவ போதை
ஆண்: தந்தாய்யடி

1 comment:

பழமொழி