யூரோ கால்பந்து கோப்பைக்கான போட்டி, தற்பொழுது காலிறுதி நிலைக்கு வந்துள்ளது.
நடப்பு வாகையர் பட்டம் சூட்டியுள்ள போர்ச்சுகல் நாட்டு அணியும், நடப்பு உலககோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணியும், அதிர்ச்சி தரக்கூடிய அளவில் நேற்று வெளியேறின.
இன்று இரவு நடந்த விறுவிறுப்பான போட்டியில் ஜெர்மனி அணியை இங்கிலாந்து அணி 2-0 என்ற இலக்கு கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் உக்ரேன் அணி ஸ்வீடன் அணியை 2-1 என்று இலக்கு கணக்கில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் 90நிமிடங்கள் வரை 1-1 என்று சம நிலையில் இருந்தது. 30 நிமிட கூடுதல் நேரத்தில் உக்ரைன் மேலும் ஒரு கோல் அடித்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியது
காலிறுதி போட்டிகளின் அட்டவணை விவரம் பின்வருமாறு
No comments:
Post a Comment