நிஜத்தின் சாதனை கனவில்
நிஜத்தின் தோல்வியும் கனவில் வெற்றியின் துவக்கம் கனவில் தோல்வியில் துவளாமல் கனவில் எண்ணத்தின் தொடக்கம் கனவில் இமயத்தை நோக்கிய இலக்கு கனவில் துவண்டு விடாத எண்ணம் கனவில்
ஏழையின் வெற்றியும் கனவில் வறுமையின் அழிவும் கனவில்
அரசியல்வாதிகள் நல்லவர்கள் கனவில் அவர்களை பற்றிய நல்லெண்ணம்
காதலின் வெற்றியும் கனவில்
தூக்கத்தில் ஆறுதலாய் கனவு ஏக்கத்தின் முடிவாய் கனவு
கனவின் தொடக்கம் எண்ணமே
எண்ணத்தை விதைக்கவும் கனவே சிகரத்தை நோக்கி கனவு காணோம் கனவு நிஜமாக உழைப்போம், உயர்வோம்
No comments:
Post a Comment