இன்றைய குறள்

Sunday, December 10, 2017

சாமானியனே சாமானியனே

சாமானியனே சாமானியனே,
சகித்துத்தகொள் சாமானியனே,
ஊருக்கு மட்டும் உபதேசம் சாமானியனே,
உனக்கு இல்லை கோவனம் சாமானியனே,
மாடகோபுரம் தலைவனுக்கு சாமானியனே,
உன் குடிசை வீடு எரியும் சாமானியனே,
மானம் மரியாதை தலைவனுக்கில்லை சாமானியனே,
உனக்கு மானம் பெருசு என்பார் சாமானியனே,
ஊழலில் திலைத்திருப்பார் சாமானியனே,
உன் மேல் வரி திணித்து நாட்டுப்பற்று என்பார் சாமானியனே,
வானம் பறப்பார் தலைவர் சாமானியனே,
சாலையில் நீ செல்ல சுங்கம் வசூலிப்பர் சாமானியனே,
நாட்டுப்பற்று பேசுவார் சாமானியனே,
நாடு உனக்கில்லை அடிப்பார் சாமானியனே,
மத வெறி ஏற்றுவார் சாமானியனே,
மனிதம் தான் என முழங்குவார் சாமானியனே,

மேல் மட்ட தலைவர்கள் கை குலுக்க சாமானியனே,
நீ மோதிக்கொண்டு வீழ்கிறாயே சாமானியனே,
அரசியல்வியாதிகளை நம்பாதே சாமானியனே,
அவர்களுக்காக வரிந்துகட்டாதே சாமானியனே!!!!!!!!!!!!!!

மனசு கேட்கவில்லை சாமானியனே,
அடிமைகளில் நானும் ஒருவனே சாமானியனே,

வாழ்க்கை ஒருமுறை சாமானியனே,
அதில் மனிதம் காப்போம் சாமானியனே!!!

காந்தியின் குரங்குகளாய் இருக்காதே சாமானியனே!!!!!!!
உன் தலைவன் சொல், கடவுளினின் சொல் இல்லை சாமானியனே!!!

No comments:

Post a Comment

பழமொழி