இன்றைய குறள்

Wednesday, May 4, 2016

மடியும் முன் ஒரு மாற்றம்

அடைமழை ஓய்ந்தாலும்
தூவானம் ஓயாமல் எடுத்துச்சென்ற உயிர்கள்

Inline image 1

Inline image 2
Inline image 3

சிதறிய
உயிரற்ற உடல்கள் நம் முன்னே,
மிக அருகில் நடந்தேறிய
நம்மின அழிப்பு.
நம் கண்களோ குளமாய்.

மறக்கமுடியுமா??
வாழ்நாள் முழுவதும்,
இதை பார்த்த காயம் ஆறுமா??

இதற்கு நேரடி ஆதரவு கொடுத்த
திருட்டு முன்னேற்ற கழகம் (தி.மு.க)
மறைமுக ஆதரவு கொடுத்த
அனைத்தையும் திருட முனையும் கழகம் (அ.தி.மு.க)
இவ்விரண்டையும் விரட்டி
தமிழரை தலைமையாக ஏற்கவேண்டும்.

இந்த ஒலிப்படங்களை பார்த்த பிறகும்
தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க கட்சிகளுக்கு
வாக்களித்தால், நம்மை விட கேவலமான தமிழர்கள்
உலகிலேயே இல்லை என்று தான் அர்த்தம்.

நம் மண்ணை அந்நியன் ஆண்டால்
என்னவாகும்?
வெள்ளைக்காரன் நடத்திய அக்கிரமம் கடந்தகாலத்தில்!
சிங்களவன் நடத்திய கோரத்தாண்டவம் நிகழ்காலத்தில்!
திராவிடம் நடத்தும் எதிர்காலத்தில்!

தேவையா நமக்கு என்ற
கேள்வி எழவில்லையா உள்ளுக்குள்?

திக்கற்ற அனாதைகளாய் 
ஈழ தமிழர்கள்!
ஆதரவற்ற நிலையில்
மலேசிய தமிழர்கள்!
வெகுவிரைவில் சொந்தமண்ணை விட்டு
தமிழக தமிழர்கள்!

நம் இனம் நம்மை ஆட்சி செய்யக்கூடாது
என்று நினைக்கும் நாம் என்ன
எட்டப்பன் அல்லது கருணா பரம்பரையா?

இன்னமும் தமிழனை ஆட்சியில் அமர்த்தவில்லை என்றால்
நாம் தமிழகத்தை விட்டு செல்லும் காலம் விரைவில் வரும்.

இந்நிலை வேண்டுமா?
50 ஆண்டுகால திராவிட ஆட்சி
தமிழர்களுக்கு இனிக்கிறதா?

நிரம்ப இனிப்பு சேர்ந்துவிட்டது,
ஆதலால் நம் இனத்திற்கு நோய்!!!!
போதும்.
இதுவே அதிகம்
இது கொடுத்த காயங்கள் ஆறவில்லை!!
இது விட்டு சென்ற வலிகள் தீரவில்லை!!
இதனால் மாற்றம் எங்குமில்லை!!
ஆதலால் வளர்ச்சி காணவில்லை!!
இந்த எண்ணம் மனதில் ஓயவில்லை!!

தேடி காணவேண்டும் விடியலை!!இல்லையேல் வளர்ச்சி நமக்கில்லை!!
ஏன் இந்த அடிமை நிலை?

மனம் மாறட்டும்
மாற்றம் மண்ணில் தோன்றட்டும்
வெற்றி ஒலி ஒலிக்கட்டும்
திராவிடம் வீழ்ந்து மடியட்டும்
ஆட்சி மாறட்டும்
மருந்தாய் தமிழர் தலைமை அமையட்டும்
பிணி தீரட்டும்
வலி மறையட்டும்
இருள் கலையட்டும்
தமிழகம் வளரட்டும்
தமிழர்கள் நிமிரட்டும் 

தாய்த்தமிழ் நிலைக்கட்டும்.......

1 comment:

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.