இன்றைய குறள்

Tuesday, April 19, 2016

திராவிடமா தமிழினமா!!! [முடிவு உங்கள் கையில்]



திராவிடமா தமிழினமா!!!

நம் உறவுகளின் சமீபத்திய கேள்வி தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமா அல்லது தை மாதமா. இது தான் நாம் நமக்கு அளித்தக்கொண்ட பரிசு. திருட்டு திராவிடத்தை ஆட்சியில் அமர்திய பங்கு நமக்கே உண்டு. அதுவே இந்த பதிவிற்கு காரணி.

தை மாதம் தான் தமிழ் புத்தாண்டு என்று உரைப்பவர்கள் தயவு செய்து தமிழ் மாதங்களை மனதினுள் வேகமாக வரிசை படுத்தங்கள். உங்களுக்கே விளங்கும். திமுக அஇஅதிமுக இரண்டும் தமிழ் விரோத கட்சிகள் என்று நிச்சயமாக கூறமுடியும்.

என்றுமே நமக்கு நல்லது நடக்கவேண்டும் என்று திருட்டு திராவிடம் நினைத்ததில்லை.

உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும் என்று பிதற்றுகிறார் ஒருவர். அவர் நமக்கு கொடுத்தது என்ன? ஊரெங்கும் சாராயக்கடைகளை மட்டும் தான். இதை தான் ஒரு தாய் தன் மக்களுக்கு செய்வாரா?? ஒரு விபச்சாரி தாய் கூட தன் மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் நினைப்பர். ஆனால் இந்த தாய் ஐய்யய்யோ வெறும் வாயால் மட்டுமே வடை சுடுவார். ஆட்சி மாற்றம் நடந்தால் நிச்சியம் நல்ல திட்டங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிடும். ஆனால் இந்த சாரயக்கடைகள் மட்டும் மூடிவிடக்கூடாது என்று கருனாநிதியும் தொடர்ந்து நடத்தி சாராய விற்பனையை் பெருக்கினார். நல்ல திட்டங்களை இரண்டு கட்சியுமே தொடரவில்லை. மாறாக தீய திட்டத்தை மட்டும் தொடர்ந்து பற்றியே வந்தது இரண்டு திருட்டு்திராவிட கட்சிகள்.

ஈழத்தில் தமிழினமே அழியும் பொழுது மத்திய அரசுக்கு கடிதம் மற்றும் தந்திகளை மட்டுமே அனுப்பி வைத்த பதவி வெறி பிடித்த ஒரு தாத்தா "அடை மழை ஒய்ந்தாலும் தூவானம் ஓயாது" என்று கூறியது இன்னும் என்னுடைய மனதில் ஆறா காயமாக வலிக்கிறது.

ஒர் அரசு வேளாண்மையை வளர்காமல் என்ன கருமத்தை செய்தாலும் அது முழுமையான வளர்ச்சியாக கருத இயலூமா? மணல் கொள்கையை தடுப்போம் என்று இரு கட்சிகளும் தேர்தல் வாக்குருதியாக அளித்தன. ஆனால் நடந்ததா? மணல் கொள்ளையில் ஈடுபடுவது இரு கட்சியிநரே, பிறகெப்படி தடுப்பார்கள்?
கெயில் எரிவாயு திட்டம்!! இதில் தமிழகத்திற்கோ அல்லது தமிழக மக்களுக்கோ ஆதாயம் இருக்கிறதா? சற்றே சிந்தித்து பார்க்கவும். சில அறிவு ஜீவிகள் மட்டும், இதனால் என்ன தீங்கு இருக்கப்போகிறது? நாட்டின் நன்மைக்காக நம் விவசாயிகள் பொறுத்துக்கொள்ளலாமே என்று அறிவிளித்தனமாக பேசுவார்கள். குழாய் பதித்துள்ள நிலத்தில் விவசாயம் செய்வது சாத்தியமற்றது. நிலத்தை ஆழமாக உழுதிடயியலாது.
இப்படியிருக்க வேளாண்மை எங்ஙனம் சாத்தியம்?

நம் மண்ணை நாசப்படுத்தும் நெகிழி பைகள், குடி நீர் பைகள் மற்றும் குடுவைகள். மக்கி போகாமல் மண் மேலே நிற்கும் இந்த நெகிழி பொருள்களால் நம் மண்ணுக்கு கேடு மிகுதி. நெகிழி பொருள்கள் தயாரிப்பை எந்த கட்சி தடை செய்யும் திட்டத்தை வைத்துள்ளது என்று நாம் சிந்திக்கவேண்டும். மக்கும் குப்பையை உரமாக்கும் திட்டத்தையும் வகுக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். வெளிநாட்டு வங்கிகளில் தங்களின் கருப்பு பணத்தை சேமித்து வைத்திருக்கும் திருட்டு திராவிட கட்சியினருக்கு நம் மண்ணை பற்றி என்ன கவலை. தமிழ்நாடு நாசமாக போகும் என்று தெரிந்தவுடன் அவர்கள் வெளிநாட்டிற்கு பறந்துவிடுவார்கள். நாம் தான் இங்கு பிழைப்பு தேடி சொந்த மண்ணை விட்டு பரதேசியாய் வெளியேற வேண்டும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க.

கூடங்குளம் அணு மின் நிலையம். அது ஏன் தமிழகத்திற்கு வந்தது. அந்த அணு மின்னி நிலையத்தால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன கிடைக்கபோகிறது? அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும். தமிழர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை. அதன் கழிவுகளை கொட்ட அவர்களுக்கு ஓரிடம் வேண்டும். அது நம் நிலத்தில் கொட்டி புழு பூச்சி கூட உருவாகாத நிலையை உண்டாக்க வேண்டும் என்பதே திராவிட கட்சிகளின் எண்ணம் போல. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா அரசாங்கத்தால் அனுமதி மறுக்கப்பட்ட அணு மின் நிலையத்தை ஏன் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும்? தமிழர்களை நாசப்படுத்துவதற்கு மட்டுமே இத்திட்டம். இதனால் நமக்கு ஒரு பயனும் இல்லை.

நகரங்கள் விரிவடைகின்றன. என்ன காரணம்? விவசாயம் தேய்ந்து வருவதால் பிழைப்பு தேடி நகரங்களுக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை உயர்கிறது. இவ்வுலகில் ஆகச்சிறந்த தொழில் என்னவென்றால் அது வேளாண் தொழில் மட்டுமே. எவர் எந்த பணி புரிந்தாலும் அவர்கள் மூன்று வேலை உணவருந்தியே ஆகவேண்டும். எல்லோரும் பசியாற ஒரு விவசாயின் உழைப்பு மட்டுமே தேவை. எந்த உணவும் விவசாயின் உழைப்பு இல்லாமல் நமக்கு கிடைக்கபோவதில்லை. நான் காசு கொடுக்கிறேன் எனக்கு உணவு கிடைக்கிறது என்று சிந்திக்கும் நபரா நீங்கள்? அப்படி இருந்தால் தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள். தாங்கள் விளைவித்த பயிரை விற்பனை செய்ய விருப்பமில்லை என்று விவசாயிகள் நினைத்துவிட்டால், நம் நிலை என்ன? ஆக எந்த கட்சி விவசாயிகளுக்கும், வேளாண் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பார்க்கவும். வேளாண் தொழிலுக்கு மூலதனம் தண்ணீர். அந்த தண்ணீரை நம் பூமியில் இருந்து உரிந்து எடுக்கும் தண்ணீர் ஆலைகள், மது ஆலைகள், குளிர்பான ஆலைகள் இவை அனைத்தையும் மூட எந்த கட்சி திட்டங்களை வைத்திருக்கிறது என்று பாருங்கள். இந்த ஆலைகளை தவிர்த்து அந்நிய நாட்டினால் நம் மண்ணில் திட்டமிட்டு வளர்திவிட்டு நம் நிலத்து நீரை உரியும் சீமை கருவேல மரங்களை நம் மண்ணைவிட்டு அகற்ற எந்த கட்சி திட்டமிட்டுள்ளது என்று பாருங்கள். ஆலைகளையும், சீமை கருவேல மரங்களையும் நம் மண்ணில் இருந்து களைந்தாலே போதும் நம் நிலத்தடி நீர் மிச்சமாகும். 

வரமாய் வந்த மழை நீரை கூட நீர் நிலைகளில் சேமிக்க முடியாதநிலை. நீர்நிலைகள் ஆக்ரமிப்பிற்கு இவ்விரு திராவிட கட்சிகளே காரணம் என்று நான் சொல்லி மக்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. 

மேலும் தண்ணீருக்கு அண்டை மாநிலங்களை அண்டி இருப்பதற்கு நம் தமிழகத்தில் பாரும் ஆறுகளை இணைத்தால் மழைகாலத்தில் கடலில் கலக்கும் நீர் சேமிக்கப்படும்.
மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். கேரளாவில் ஆற்றில் மணல் எடுத்தால் குற்றம். ஆனால் அந்த ______________ நம்மிடத்தில் மணல் வாங்குவார்கள். அதை அள்ளித்தர நமது ஆட்சியாளர்களும் முன்வருவார்கள். இது வரை நம்மை ஆண்ட திருட்டு திராவிட கட்சிகள் ஒன்றும் செய்யவில்லை. இனி நாம் ஏன் அவர்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தவேண்டும். இந்த தேர்தலில் நாம் திராவிட கட்சியினரை (தி.க தி.மு.க அ.இ.அ.தி.மு.க ம.தி.மு.க தே.மு.தி.க) தமிழகத்தில் இருந்து தூக்கி எரிய வேண்டும். இனி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இந்த தமிழ் துரோக கட்சிகள் கைவிடவேண்டும். தமிழா, நம் இனத்திற்கு துரோகம் இழைக்கும் திராவிடமா? அல்லது நம்மை காப்பாற்ற முனையும் தமிழினமா? என்று நாம் சிந்திக்கும் நேரம் இதுவே. இதை விட்டால் நமக்கு வேறொரு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் ஐயம் உள்ளது.

இப்பொழுது இருக்கும் முதல்வர் வேட்பாளர்களில் இருவர் மட்டுமே தமிழர்கள் என்பது நமக்கு அவமானம் தரக்கூடிய சங்கதி.  பரவாயில்லை இருவராவது இருக்கின்றார்களே! ஒருவர் திரைப்பட இயக்குநர் சீமான், மற்றொருவர் மருத்துவர் அன்புமணி. இவ்விரு கட்சி வேட்பார்களுக்கு தமிழர்கள் வாக்களித்தால் போதும். தானாகவே திருட்டு திராவிடத்திற்கு பயம் வந்துவிடும். எவருக்கு தெரியும், பிற்காலத்தில் தமிழர்களை தோற்கடிக்க தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவும் சேர்ந்து கூட்டணி அமைக்கலாம். வாய்ப்பு கொடுத்தால் தான் எவரும் சாதிக்க முயலும். ஒருமுறையேனும் வாய்ப்பு கொடுக்காமல் அவர்கள் அப்படி, இவர்கள் இப்படி என்று குறை கூறி மீண்டும் திராவிடத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் இனி தமிழர்கள் தமிழகத்தில் இருந்து துரத்தப்படும் அவலம் நிச்சயம் அரங்கேறும் என்பதே நிதர்சனம். திருவாளர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த பொழுது, பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அதிகாரத்தில் அவருக்கு அனுபவமும் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் (திரைப்படத்துறையில்) இருந்து முதல்வரை தேர்வு செய்வதை நாம் நிறுத்தவேண்டும். நல்லவேளை இந்த நட்சத்திர மட்டைபந்து போட்டியை நம் உறவுகள் ஆடுகளத்திற்கு சென்று பார்க்கவில்லை. இதற்கு நம்மை நாமே பாராட்டிக்கொள்ளவேண்டும்.

தரமான கல்வி,
ஆரோக்கியமான உணவு,
முன்னேற்ற பாதை,
வளமான தமிழகம்,
பாதுகாப்பான வாழ்க்கை,
தயவு செய்து சிந்தித்து வாக்களிப்போம்.
தமிழனுக்கு வாய்ப்பளிப்போம் தமிழகத்தை காப்போம்

வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்

No comments:

Post a Comment

பழமொழி