இன்றைய குறள்

Tuesday, April 14, 2015

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் பாடல் வரிகள் [இது என்ன மாயம் பாடல் வரிகள்]

படம்: இது என்ன மாயம்
பாடல்: இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்
இசை: ஜி. வி. பிரகாஷ்
பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் & ஹரிணி



பெண்:

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
ஆண்:
எங்கும் உன் முக பிம்பம்
நெஞ்சில் வந்து அது தங்கும்
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி
கண்ணில் நீர் அது பொங்கும்
காதல் வந்தது அங்கும்
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி

பெண்:
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்


ஆண்:
வெளிச்சம் இல்லாமல் நிழலும் இல்லை
உயிர் நீ இல்லாமல் நானும் இல்லை
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை
பெண்:
பனியில் பாதைகள் மூடும்
வெயிலில் வழி வருமே
ஆண்:
அருகினில் வருகையில்
உணர்கிற மயக்கத்தை
மறுபடி தா கொஞ்சம்
பெண்:
சுடுகிற மலர்களை தொடுகிற காலனி
கதறுது என் நெஞ்சம்
ஆண்:
இனி வரும் இரவிலும்
இனி வரும் பகலிலும்
கனவுகள் என் தஞ்சம்
அன்பே வா உயிரே


பெண்:
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்


ஆண்:
மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
மழை மட்டும் தராது வானவில்லை
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை
பெண்:
அருகில் இருந்தும் காதல்
பிரிவில் பெருகிடுமே
ஆண்:
ஒரு முறை தெரியுது மறுமுறை மறையுது
தொலையுது உன் பிம்பம்
பெண்:
கனவுகள் வருவது காலையில் கலைவது
காதலில் பேரின்பம்
ஆண்:
இதுவரை இதுவரை இடைவேளை தொடர்ந்திடும்
கேட்க்குது என் நெஞ்சம்
அருகே வா உயிரே


பெண்:
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்

No comments:

Post a Comment

பழமொழி