இன்றைய குறள்

Tuesday, April 14, 2015

இரவாக நீ நிலவாக நான் பாடல் வரிகள் [இது என்ன மாயம் பாடல் வரிகள்]

படம்: இது என்ன மாயம்
பாடல்: இரவாக நீ நிலவாக நான்
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்
இசை: ஜி. வி. பிரகாஷ்
பாடியவர்கள்: ஜி. வி. பிரகாஷ் & சைந்தவி



பெண்:
இரவாக நீ நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம்தானடா
ஆண்:
தொலையும் நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி
கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே
பெண்:
ஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க
ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என்னுயிரே காதோரோம் காதல் உரைக்க
பெண்:
ஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க
என்னுயிரே மறு பார்வை போதும் பிறக்க

பெண்:
இரவாக நீ நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம்தானடா
ஆண்:
தொலையும் நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி

ஆண்:
விழி தொட்டதா விரல் தொட்டதா
எனதாண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா
பெண்:
அனல் சுட்டதா குளிர் விட்டதா
அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா
ஆண்:
நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும் இடம் போதுமே
பெண்:
உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும்
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்
ஆண்:
ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க என் உயிரே
காதோரம் காதல் உரைக்க

ஆண்:
மழை என்பதா வெயில் என்பதா
பெண்ணே உன் பேரன்பை நான் புயல் என்பதா
பெண்:
மெய் என்பதா பொய் என்பதா
மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா
ஆண்:
அடியே பெண்ணே அறியாத பிள்ளை நானே
தாய் போல் என்னை நீ தாங்க வா
பெண்:
மடி மேல் அன்பே பொன் ஊஞ்சல் நானும் செய்தேன்
தாலாட்ட உன்னை அழைப்பேன்
ஆண்:
ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க என் உயிரே
காதோரம் காதல் உரைக்க

பெண்:
இரவாக நீ
ஆண்:
இரவாக நீ
பெண்:
நிலவாக நான்
ஆண்:
நிலவாக நான்
பெண்:
உறவாடும் நேரம் சுகம்தானடா

No comments:

Post a Comment

பழமொழி