இன்றைய குறள்

Saturday, November 15, 2014

கொள்ளு இட்லி செய்முறை



தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி          -     2கப்
கொள்ளு             -     1கப்
வெந்தயம்            -     1/2 மேசை கரண்டி
வெள்ளை உளுந்து    -     3 மேசை கரண்டி
உப்பு                 -     தேவைக்கு ஏற்ப

செய்முறை:
முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொள்ளவும்.
அரிசி, கொள்ளு, வெந்தயம், வெள்ளை உளுந்து போன்றவற்றை தனித்தனியாக பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
அரிசி, கொள்ளு இரண்டையும் நன்றாக அலசி, பிறகு சேர்த்து இட்லி பதத்தில் அரைக்கவும்.
வெந்தயம், உளுந்தம் பருப்பு இரண்டையும் நன்றாக அலசி, பிறகு சேர்த்து இட்லி பதத்தில் அரைக்கவும்.
அரைத்த மாவுகளை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து வெளியில் 4 மணி நேரம் வைக்கவும். பிறகு குளிர்பதன பெட்டியில் எடுத்து வைத்து கொள்ளவும்.
மறுநாள் காலை இட்லி பானையில் இட்லி சுடவும்.
சுவையான கொள்ளு இட்லி தயார்.
குறிப்பு: அனைத்து வகையான சட்னி,சாம்பார் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

பழமொழி