இன்றைய குறள்

Friday, November 14, 2014

உன்ன இப்ப பார்க்கணும் [கயல் பாடல் வரிகள்]


படம்: கயல்
பாடல்வரிகள்: யுகபாரதி
இசை: டி. இமான்
பாடியவர்கள்: ஆனந்தி சந்தரன்
இயக்கம்: பிரபு சாலமன்

ஆண்:
உன்ன இப்ப பார்க்கணும் ஒன்னு பேசணும்
என்ன கொட்டி தீர்க்கனும் அன்ப காட்டனும்
பெண்:
உறவே....மனம் தேம்புதே
உசுரே....தர ஏங்குதே
ஆண்:
நீ எங்கேயும் போகாத நான் வாரேன் வாடாத

உன்ன இப்ப பார்க்கணும் ஒன்னு பேசணும்
பெண்:
என்ன கொட்டி தீர்க்கனும் அன்ப காட்டனும்

பெண்:
இங்கே கடல் அங்கே நதி இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல் விழுந்திட இடம் தேடுதே
கண்ணீரிலே காவியம் தண்ணீரிலே ஓவியம்
வரையும் விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ

பெண்:
உன்ன இப்ப பார்க்கணும் ஒன்னு பேசணும்
ஆண்:
என்ன கொட்டி தீர்க்கனும் அன்ப காட்டனும்

ஆண்:
இங்கே உடல் அங்கே உயிர் இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி பாயும் ஒளி நீயடி
கதிரே வந்து கண்ணோடு கலந்து விடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்து விடு

ஆண்:
உன்ன இப்ப பார்க்கணும் ஒன்னு பேசணும்
பெண்:
என்ன கொட்டி தீர்க்கனும் அன்ப காட்டனும்
ஆண்:
உறவே....மனம் தேம்புதே
பெண்:
உசுரே....தர ஏங்குதே
ஆண்:
நீ எங்கேயும் காணாம எங்கே நான் போவேனோ
பெண்:
உன்ன இப்ப பார்க்கணும்

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.