இன்றைய குறள்

Thursday, October 2, 2014

ஆசிய விளையாடு 2014 -- இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்று சாதனை

எட்டாத கனியாக இருந்தது கையில் வீழ்ந்தது இன்று. பதினாறு ஆண்டு கால கனவு பலித்தது.

இந்திய ஹாக்கி அணி தன்னுடைய எதிரியான பாக்கிஸ்த்தான் அணியை வெற்றிக்கொண்டது. இது இந்திய ஹாக்கி வரலாற்றில் மகத்தான வெற்றியாக கருத்தப்படுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் எடுக்கமுடியாமல் திணறியது. இந்த எண்ணம் இன்ஷியான், கொரியநாட்டில் நடந்தேறியது. தகுதி சுற்றில் இதே பாக்கிஸ்த்தான் அணியிடம் 1-2 என்ற இலக்கு கணக்கில் தோல்வியை தழுவியது இந்திய அணி. அத்தோடு அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற எண்ணம் வந்தது. அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை சொந்த மண்ணில் வென்றது இந்திய வீரர்களுக்கு புது தெம்பை வழங்கியது.

இறுதி போட்டியில் நிறைய வாய்ப்புகளை தவறவிட்டது இந்திய அணி. பாக்கிஸ்த்தான் முதலில் இலக்கு அடித்து 1-0 என்று முன்னிலையில் இருந்தனர். பின் 28வது நிமிடத்தில் கொதஜித் சிங் இந்திய அணிக்காக இலக்கு அடித்து ஆட்டத்தை சமன் செய்தனர். முடியும் நேரத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் கிடைத்து, ஆனால் அதில் இலக்கு அடிக்க தவறிவிட்டனர் இந்திய அணியினர். ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிந்ததால், பெனால்டி மூலமாக வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யவேண்டிய நிலை இருந்தது. இதில் இந்திய அணி 4-2 என்ற இலக்கு கணக்கில் வென்று சாதனை புரிந்தனர்.

இந்த வெற்றி மூலம் இந்திய ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் அவ்வீரர்களுக்கு.....!


No comments:

Post a Comment

பழமொழி