இன்றைய குறள்

Tuesday, November 18, 2014

அதோ வானிலே நிலா போகுதே [ பாடல் வரிகள் - இசை 2014 ]

படம்: இசை
இசையமைபாளர்: எஸ். ஜே. சூர்யா
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: கார்த்திக், சின்மயி, எஸ். ஜே. சூர்யா

ஆண்:
அதோ வானிலே நிலா போகுதே எதை தேடி தேடி
அதை கேட்கலாம் துணையாகவே என்னோடு வா நீ
அதோ வானிலே நிலா
எதை தேடுதோ நிலா
பெண்:
அதோ வானிலே நிலா போகுதே அதன் ஜோடி தேடி
தனக்கேற்ற ஒரு துணை யாரென மலை மீது ஏறி

ஆண்:
துணை கிடைத்தப்பின் துணை தேடுனா சரிதானா கூறு
பெண்:
இணையான துணை சரியா என சரிபார்த்தல் நன்று
ஆண்:
துணை கிடைத்தப்பின் துணை தேடுனா சரிதானா கூறு
பெண்:
இணையான துணை சரியா என சரிபார்த்தல் நன்று
ஆண்:
அதோ வானிலே நிலா போகுதே எதை தேடி தேடி
பெண்:
அதோ வானிலே நிலா போகுதே அதன் ஜோடி தேடி

பெண்:
நிலா மயங்குதே ஓஓஓ நிலா மயங்குதே
பெண்மை தயங்குதே ஓஒஓ நிலா தயங்குதே
குளத்து நீரில கல்லை எறிஞ்சி
வலைச்சி வலைச்சி நெஞ்ச பிழிஞ்சி
திட்டம் போட்டு தீண்ட துடிச்சா தயங்குதே
நிலா தயங்குதே ஓஓஓ நிலா தயங்குதே
நிலா மயங்குதே உன்ன பார்க்க தயங்குதே
ஆண்:
நெஞ்சு தூண்ட தானே நானும் கல்லா வீசினேன்
நீரில் மட்டும் போட்டு உனக்கு வளையல் மாட்டினேன்
பெண்:
பேச்சு மட்டும் தான் பெருசா இருக்கு
செயலில் சேட்டை கண்ட நிலவு மிரண்டு இருக்கு
ஆண்:
உன் மிரலுற முழியையும் பார்த்தேன்
அன்பு திரளுர மனசையும் பார்த்தேன்
இந்த வளருர தேயுற வழக்கம் ஏனடி
சொல்லு நிலவே ஓஓஓ வெள்ளி நிலவே
நில்லு நிலவே வந்து சொல்லு நிலவே

ஆண்:
அதோ வானிலே நிலா போகுதே எதை தேடி தேடி
பெண்:
அதோ வானிலே நிலா போகுதே அதன் ஜோடி தேடி

ஆண்:
நிலாவே
நிலவே நிலவே வெள்ளி நிலவே
துள்ளி துள்ளி துள்ளி வரும் நிலவே
நெஞ்சை கில்லி கில்லி விடும் நிலவே
அள்ளி அள்ளி அள்ளி ஒளி வீசி வீசி
தினம் பேசும் நிலவே
என் அன்னை அருள் பெற்ற நிலவே
இனி அன்பு தமிழ் பேசு நிலவே
எங்கள் நிலவே வா நிலவே

ஆண்:
நிலா தாக்குதே ஓஓஓ நிலா தாக்குதே
எனை பாக்குதே ஓஓஓ நிலா தாக்குதே
வெட்கக் பார்வ நெஞ்சை கொளுத்த
கொளுத்த இதழின் இதழை அழுத்த
ஒரு முத்தம் தந்து தீய அணைக்கவா
நிலா ஓடிவா ஓஓ நிலா ஓடி வா
முத்தம் கொடுக்கவே ஓஓ நிலா ஓடி வா
வா வா வா வா
பெண்:
முத்தம் என்ன என்னை மொத்தம் தருகிறேன்
சத்தமின்றி நித்தம் மேகம் மெத்தை விரிக்கிறேன்
மங்கை கழுத்தில் மாலை வீழவும் வேளை வரவும்
மடியில் வீழ்வேன் மயக்கம் தருவேன்
ஆண்:
நீ பௌர்ணமி ஆகிடும் போது
அன்று பணி விழும் மலர்களின் மீது
என் உயிர உன் கழுத்தில கயிறா மாட்டுவேன்
மாலை சூட்டுவேன் நிலவே மாலை சூட்டுவேன்
மாலை சூட்டுவேன் உன்னை மனதில் பூட்டுவேன்

ஆண்:
அதோ வானிலே நிலா போகுதே எதை தேடி தேடி
அதை கேட்கலாம் துணையாகவே என்னோடு வா நீ

பெண்:
அதோ வானிலே நிலா போகுதே அதன் ஜோடி தேடி
தனக்கேற்ற ஒரு துணை யாரென மலை மீது ஏறி
தனக்கேற்ற ஒரு துணை யாரென மலை மீது ஏறி
தனக்கேற்ற ஒரு துணை யாரென மலை மீது ஏறி

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.