இன்றைய குறள்

Wednesday, November 19, 2014

நான் காண்பது இங்கு உண்மையா [இசை பாடல் வரிகள்]


படம்: இசை
இசையமைபாளர்: எஸ். ஜே. சூர்யா
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ்


நான் காண்பது இங்கு உண்மையா
ஹே உயிரே என் உயிரே நீ சாகாதிரு
நான் வாழ்வதே இங்கு உண்மையா
என் மனமே என் மனமே நீ வீழாதிரு
எனை சுட்ட நிலவு பொய்யா
எனை தொட்ட தென்றல் பொய்யா
நீ இட்ட முத்தம் பொய்யா
பெண்ணே நீ மெய்யா இல்லை பொய்யா
சிறு ஒரு இதயத்தை மறுபடி மறுபடி
உலகமே மிதித்ததடி
வலியிலும் துயரிலும் குழம்பிய இருதயம்
உனக்கென்ன துடித்ததடி
வீழ்கையில் நான் வீழ்கையில்
உன் காதல் தாங்குமடி
நீயுமே பொய்யாகினால்
என் உயிரே நீங்குமடி
நீ பொய்யா

யார் கேட்டது இந்த காதலை
ஏ விழியே நீ அவளை ஏன் காட்டினாய்
யார் கேட்டது இந்த பொய்யினை
என் மனமே நீ எனை ஏன் ஏமாற்றினாய்
அவள் மோதல் முழுவதும் பொய்யா
அவள் விழியின் மொழிகள் பொய்யா
அவள் முத்தம் மொத்தம் பொய்யா
எனக்காய் துடித்தாளே அது பொய்யா

கனவுகள் விளைவதும்
கனவுகள் கலைவதும்
தினம் தினம் நிகழ்வதடி
ஒரு யுக நினைவினை
நொடியினில் உடைப்பது
கொடுமையின் கொடுமையடி

பிள்ளை போல் சிறு பிள்ளை போல்
என் நெஞ்சம் கொண்டிருந்தேன்
முள்ளை போல் ஒரு முள்ளை போல் அதில்
உன்னை சுமந்திருந்தேன், கிழிகின்றேன்

காற்றின்றியே  இங்கு வாசமா
ஏ மலரே  ஏன் இதழலால் நீ பொய் பேசினாய்
வானின்றியே இங்கு தூரலா
ஏ முகிலே ஏன் துளியாய் நீ பொய் பேசினாய்

அவள் விழியின் கண் மை உண்மை
அவள் இதழின் மென்மை உண்மை
அவள் பெண்மை கூட உண்மை
மெய்யே பொய் என்றால் எது உண்மை

அவளையும் இசையையும் எனதிரு விழியென
உலகத்தை ரசித்திருந்தேன்
விழிகளில் பிழையில்லை உலகமே விடுமென
இருண்டிட குழம்பி நின்றேன்
ஐம்புலன் என் ஐம்புலன் உனை ஐயம் கொல்லுதடி
நெஞ்சமோ என் நெஞ்சமோ அதை ஏற்றிட மறுக்குதடி
இது உண்மை
இது உண்மை

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.