இன்றைய குறள்

Saturday, August 16, 2014

ஏன் இங்கு வந்தான் [மீகாமன் பாடல் வரிகள்]

படம்: மீகாமன்
பாடல் வரிகள்: மதன் கார்க்கி
இசை: எஸ். தமன்
பாடகர்: எ. வி. பூஜா






ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொன்னேன்
என்னுளே சென்றான்

உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றான்
சிறிது சிருதாய் கிறக்கங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றான்
பூவும் திறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றான் ஓ ஓ ஓ
காதல் பிறக்கும் நொடியில் முன்னே
காமம் கொடுக்கின்றான்

ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான் ஓ ஓ
செல் என்று சொன்னேன்
என்னுளே சென்றான்


என் அழகை ரசிக்கிறான்
என் இளமை ருசிக்கிறான்
என் இடையின் சரிவிலே
மழை துளியென உருள்கின்றான்

என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தை மதுவாய் சுவைத்தான்
என் கண்களின் சிவப்பை
அழகினில் ஏந்தி
கன்னத்தில் பூசுகின்றான்

விடிய விடிய இரவினை வடித்து
குடிக்க செய்தானே ஓ ஓ ஓ
கொடிய கொடிய வலிகளை கூட
பிடிக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொன்னேன்
என்னுளே சென்றான்


நான் ஒளியில் நடக்கிறேன்
என் நிழலாய் தொடர்கிறான்
என் விளக்கை அனைக்கிறேன்
என் இருளென படர்கின்றான்

முன் அனுமதியின்றி நுழைந்தான்
என் அறையினில் எங்கும் நிறைந்தான்
இது முறையில்லை என்றேன்
வரையறை இன்றி
என்னை அவன் சிறை பிடித்தான்

சிறையினுள்ளே சிறகுகள் தந்து
பறக்க செய்தானே
கனவும் நினைவும் தொடும் ஒரு இடத்தில்
இருக்க செய்தானே


ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான் ஓ ஓ
செல் என்று சொன்னேன்
என்னுளே சென்றான்

No comments:

Post a Comment

பழமொழி