இன்றைய குறள்

Friday, June 20, 2014

ஹிந்தியில் கட்டாய கல்வி.

ஹிந்தியில் கட்டாய கல்வி வேண்டுமா? என்ற கேள்விக்கு ஆம் என்றும் வேண்டாம் என்றும் மாறி மாறி பதில்கள் வருகிறது.

ஏன் ஆம்?
ஆம் என்று ஆதரிக்கும் பலர் கூறுவது இதை தான்:-

௧) ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி. என்னுடைய தேசிய மொழியை நான் கற்பதில் என்ன தவறு இருக்கிறது? இதை போன்று சொல்லும் ஆட்களுக்கு பதில் இந்தியாவிற்கு தேசிய மொழியும் இல்லை, தேசிய விளையாட்டும் இல்லை என்பது தான் உண்மை. கீழே உள்ள இணைப்பிற்கு சென்று பார்க்கவும், இந்தியாவின் தேசிய மொழி எது என்று

இங்கே சொடுக்குங்கள்

௨) மக்களை தமிழில் படிக்க சொல்லிவிட்டு, அரசியல்வாதிகள் அவர்களின்பேரன்களையும், பேத்திகளையும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் படிக்க வைக்கின்றார்கள். உண்மைதான், என்ன செய்தீர்கள். அவர்கள் அறிவிளிகள். மேலும் 1977க்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள், இன்னமும் செய்து கொண்டிருப்பவர்கள் யாரும் தமிழர் இல்லை. மலையாளி, தெலுங்கன், கன்னடச்சி. இவர்களுக்கு ஏன் தமிழ் மொழிப்பற்று இருக்க வேண்டும்?

௩) நான் பக்கத்து மாநிலங்களுக்கு போனால் திருதிருவென விழிக்கிறேன். அவர்கள் எல்லாம் சரளமாக ஹிந்தியில் பேசுகின்றார்கள் என்னால் முடியவில்லை. நான் குடும்பத்தோடு அங்கு இருக்கிறேன். என் குடும்பத்தார் மிகவும் அவதிப்படுகின்றார்கள், அல்லல் படுகின்றார்கள். இங்கு தமிழகத்தில் இருந்து நாம் பல மாநிலங்களுக்கு செல்கிறோம். மறுக்கமுடியாத உண்மை. இதை போலவே பல மாநிலங்களில் இருந்து இங்கு வந்து எப்படி எளிதாக அவர்களால் சம்பாரிக்க முடிகிறது? முன்னேற முடிகிறது? யாராவது சிந்திதீர்கள்? உங்களுக்கு இருக்கும் அதே மொழி பிரச்சனை அவர்களுக்கு இருக்காதா? சொல்லுங்கோ சேட்ஜி? ஏன் அவர்களால் தமிழை எளிதில் கற்க முடிகிறது? என்னென்றால் தமிழ் தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி என்பதே உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மை. இதை சொன்னால் இதற்கு சான்று கொடுங்கள் என்று கேட்பார்கள். சான்றாக சென்னையில் வேலை செய்யும் பிற மாநிலத்தவர். அவர்களால் இங்கு பிழைப்பு நடத்த முடியும் என்றால் உங்களாலும் முடியும்.

ஜப்பானில் நிறைய பேர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அந்த நாடு வளர்ச்சியடைந்த நாடு என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஜப்பானியர்கள் எப்படி வளர்ந்தார்கள்? தாய் மொழி கற்றலை விட சிறந்த கல்வி வேறு எம் மொழியிலும் கிடைக்காது. எளிதாக புரிதல் தாய் மொழியில் தான் கிடைக்கும். அவர்கள் ஜப்பானிய மொழியை சரியாக கற்றார்கள், இன்று கணினி இயக்குதளம் (Computer Operating System) அவர்கள் மொழியில்  இருக்கிறது.


நீ தேடி போக வேண்டாம்,
உன்னை தேடி வரவைக்கும் உன் தாய்மொழி.

இதற்கு ஏற்றார் போல ஜப்பானியர்களின் திறமைக்கு ஏற்றார் போல கணினி இயக்குதளம் அவர்கள் மொழிக்கு தேடி வந்தது, திறமை அங்கு இருப்பதால்.

எந்த மொழியையும் கற்கலாம் தவறில்லை. ஆனால் அதை திணித்து தான் கற்கவேண்டும் என்றால், அதற்கு என்ன அர்த்தம். யார்யாருக்கு எந்த மொழியை கற்க விருப்பமோ கற்றுக்கொள்ளலாம் என்ற சட்டம் போடுவது சரியா? அல்லது ஹிந்தி மொழியில் தான் பயில வேண்டும் என்பது சரியா?

ஹிந்தியில் தான் பயில வேண்டும் என்றால், இதற்கு பின்புலத்தில் அரசியல் இல்லை என்று நினைக்கின்றீர்களா? ஹிந்தி இல்லாமலே இன்று நமது தலைநகரம் தமிழர்களின் இருக்கும் இடமா அல்லது வடஇந்தியர்கள் இருக்கும் இடமா என்ற குழப்பத்தில் இருக்கிறது! ஹிந்தியும் இங்கு பேச ஆரம்பித்துவிட்டால் சென்னையில் (வெகு விரையில் தமிழகத்தில்) தமிழன் நிச்சயம் வாழமுடியாது என்பது ஆணித்தரமான உண்மை.

நான் சொல்வது சரியா தவறா? சரி என்றால் பகிருங்கள்? தவறு என்றால் தாராளமாக பின்னூட்டமிடுங்கள்.



No comments:

Post a Comment

பழமொழி