உலக கோப்பை கால்பந்து 2014 பிரிவு சி ஜப்பான் vs கிரீஸ்
worldcup football 2014 Group D Japan Vs Greece
டெட் க்ரூப் என்று சொல்லக்கூடிய க்ரூப் சி பிரிவில் சென்ற சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்த ஜப்பான் அணியும், கிரீஸ் அணியும் இன்று களம் இறங்கின. இவ்வாட்டத்தில் தோல்வியடைந்தால் உலககோப்பையில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாது என்ற நிலையில்
உள்ளதால் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் இருந்தது. வெற்றி பெற்றே தீரவேண்டும் என்பதால் முழு திறனை பயன்படுத்தி விளையாடினர் வீரர்கள்.
முதல் பாதியில் இரு அணியினரும் ஒரு இலக்கு கூட அடிக்காமல் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. ஆனால் கிரீஸ் அணிக்கு பின்னடைவு. அவ்வணியின் வீரர் கட்ஸௌரநிஸ்க்கு (Katsouranis) சிவப்பு அட்டை கான்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
வெறும் பத்து வீரர்களோடு விளையாடுவது கிரீஸ் அணிக்கு பெரிய சவாலாக அமைந்தது.
இருந்தாலும் இரண்டாம் பாதியில் இலக்கு எதுவும் ஜப்பான் அணியால் அடிக்க முடியவில்லை. கிரீஸ் அணியினர் 10 வீரர்களோடு திறமையாக தடுப்பாட்டம் ஆடினார். இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் இரு அணிக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது
இந்த ஆட்டம் முடிவடைந்த நிலையில் பிரிவு டி (Group D) புள்ளி விவரங்கள் கீழே:-
இப்பிரிவில் அடுத்த சுற்று ஆட்டத்தில் ஜப்பான், கொலம்பியா அணியோடும், கிரீஸ், ஐவரி கோஸ்ட் அணியோடும் மோதவிருக்கின்றன
No comments:
Post a Comment