இன்றைய குறள்

Friday, June 20, 2014

உலக கோப்பை கால்பந்து 2014 - உருகுவே vs இங்கிலாந்து

உலக கோப்பை கால்பந்து 2014 பிரிவு டி உருகுவே vs இங்கிலாந்து
worldcup football 2014 Group D Uruguay Vs England

டேட் க்ரூப் என்று சொல்லக்கூடிய க்ரூப் டி, பிரிவில் சென்ற சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவிய உருகுவே அணியும், இங்கிலாந்து அணியும் இன்று களம் இறங்கின. வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கின. எந்த அணி தோற்கிறதோ அவ்வணி
ஊருக்கு கிளம்பலாம். உலகக்கோப்பை கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

உருகுவேயின் வீரர் லூயிஸ் சோரஸ் (Luis Suarez) ஒரு இலக்குக அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் உருகுவே அணியை முன்னிலையில் நிறுத்தினார். இங்கிலாந்து அணிக்கு ரூனி (Rooney)இரண்டாம் பாதியில் ஒரு இலக்கு அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். ஆட்டம் முடிவதற்கு கடைசி ஐந்து நிமிடத்தில் மீண்டும் சோரஸ் மேலும் ஒரு இலக்கு அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இதன் மூலம் உருகுவே அணி 2-1 என்ற இலக்கு கணக்கில் இங்கிலாந்து அணியை
வெற்றிபெற்று 3 புள்ளிகளை பெற்றது.

இந்த ஆட்டம் முடிவடைந்த நிலையில் பிரிவு டி (Group D) புள்ளி விவரங்கள் கீழே:-



இப்பிரிவில் அடுத்த சுற்று ஆட்டத்தில், உருகுவே இத்தாலி அணியோடும், இங்கிலாந்து அணி கோஸ்டாரிக்கா அணியோடும் மோதவிருக்கின்றன

No comments:

Post a Comment

பழமொழி