கவலைகள் ஏதுமின்றி தனித்திருந்தேன்
தடைகள் இல்லாமல் மகிழ்ந்திருந்தேன்
மலைகளை பொருட்படுத்தாமல் கடந்திருந்தேன்
காவல் எனக்கில்லாமல் தடம் மாறினேன்
ஆண்டுகள் பல கடந்து தவிர்த்திருந்தேன்
தவம் கலைந்தது போல
உன் வருகை
என் வாழ்வை வசந்தமாக்குமா?
என் வாழ்வை வளப்படுத்துமா?
இன்று உன் வரவு என்னுள் பயத்தோடு
பல எண்ணங்களை என்னுள் உதிக்கவைக்கிறது
ஒவ்வொரு அடியும் சரியாக இருக்கிறதா என்ற
ஐயத்தோடு வைக்கிறேன்
இருள் சூழ்ந்த இடத்தில் வெளிச்ச துகளும்
கண்களுக்கு பாதை காட்டும்
வெளிச்ச துகளாக
தூண்டுகோளாக
உன் வரவை எதிர்நோக்கி
காத்திருக்கிறேன்
நன்னாளில் உன் பாதம்
என் இல்லத்தில் பதிக்கும் என்ற
நம்பிக்கையோடு
நான்.
No comments:
Post a Comment