இன்றைய குறள்

Wednesday, June 18, 2014

கால்பந்து உலகக்கோப்பை 2014 - ரஷியா vs தென்கொரியா



கால்பந்து உலகக்கோப்பை 2014 பிரிவு-ஹச் ரஷியா vs தென் கொரியா
WorldCup FootBall 2014 Group-H Russia Vs SouthKorea

உலககோப்பை கால்பந்து 2014 ஹச் பிரிவில் இடம் பெற்ற ரஷியாவும் தென்கொரியாவும் மோதிக்கொண்டன. ஆரம்பத்தில் தென்கொரிய வீரர்கள் இலக்கு அடிக்கும் முனைப்போடு விரைந்தனர். ஆனால் இலக்கு எதுவும் அடிக்க இயலவில்லை.
ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களில் எந்த அணியும் இலக்கு அடிக்காமல் 0-0 என்று சமநிலையில் இருந்தது.

இரு அணியினரும் தொடர்ந்து இலக்கு அடிக்கும் முயற்சியில் இருந்தனர், ஆனாலும் இயலவில்லை.

மாற்று வீரராக 69வது நிமிடத்தில் களம் இறங்கிய கொரியன் வீரர் லீ கீயுன்-ஹோ (Lee Keun-Ho) அடித்த பந்தை தடுத்துவிட்டு, சரியாக பிடிக்காமல் ரஷியா காப்பாளர் அகின்பீவ் (Akinfeev ) இலக்கினுள் தவறவிட்டுவிட்டார். இதன் மூலன் தென்கொரியா அணி 1-0 என்ற இலக்கில் முன்னிலை வகித்தது.
ரஷிய வீரர்கள் கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் ரஷிய வீரர் கேர்சகோவ் (Kerzhakov) பந்தை இலக்கினுள் அடித்து 1-1 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தார்.

சுற்று போட்டிகளில் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் அந்த பிரிவில் உள்ள அணிகளின் புள்ளிகளின் நிலை :-



அடுத்த சுற்று போட்டியில் ரஷியா பெல்ஜியம் அணியையும், தென்கொரியா அல்ஜீரியா அணியையும் எதிர் கொள்ளவிருக்கின்றன.

No comments:

Post a Comment

பழமொழி