உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு பி ஆஸ்தேரிலியா vs நெதர்லாந்த்
WorlCup Football 2014 - Group b Australia Vs Netherland
பிரிவு 'பி'யில் இடம் பெற்ற ஆஸ்தேரிலியா அணியும், நெதர்லாந் அணியும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பலப்பரீட்சை செய்தது. ஏற்கனவே ஸ்பெயின் அணியை 5-1 என்ற இலக்கு வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந் அணி
இந்த குழுமத்தில் முதல் இடத்தை தக்கவைக்கும் முனைபோடும், சிலி அணியிடம் 3-1 என்று தோல்வியை சந்தித்து எப்படியாவது வெற்றியை ஈட்டி விடும் முனைப்போடு ஆஸ்தேரிலியா அணியும் களம் இறங்கியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆஸ்தேரிலியா இலக்கு அடிக்கும் முனைப்போடு நகர்வுகளை மேற்கொண்டது. இருப்பினும் நெதர்லாந் அணி வீரர்கள் லாவகமாக பந்தை ஐயன் ராபினிடம் (Ian Robben) பந்தை வழங்க, அதை நேர்த்தியான முறையில்
இலக்கினுள் அடித்து 1-0 என்ற கணக்கில் நெதர்லாந் அணி முன்னிலை வகிக்க வைத்தார். ஆனாலும் சற்றும் சலிக்காத ஆஸ்தேரிலியா அணி வீரர்கள் தங்களின் விடாமுயற்சி மூலம் முன்னகர்வை மேற்கொண்டனர்.
அடுத்த நிமிடத்தில் நெதர்லாந்த் அணியின் தடுக்கள வீரர்களை தாண்டி பறந்து வந்த பந்தை நேராக இலக்கினுள் அடித்தார் காஹில் (Cahil). இதன் மூலம் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா அணி முதல் பாதி முடியும்வரை
தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியது.
இரண்டாம் பாதி ஆட்டம் துவங்கி 54வது நிமிடத்தில் பெனால்ட்டி மூலம் கிடைத்தை வாய்ப்பை ஆஸ்தேரிலியா அணித்தலைவர் மைல் ஜெடினாக் (Mile Jedinak) இலக்கினுள் அடித்து அணியை 2-1 என்ற இலக்கு கணக்கில் முன்னிலை வைகிக்க செய்தார்.
அதன் பிறகு 4 நிமிடங்கள் கழித்து ஆஸ்தேரிலியாவின் காப்பாளர் கட்டத்தினுள் நெதர்லாந்தின் ஷேனைண்டர் பந்தை வேன் பர்சியிடம் வழங்க அவர் அதை அருமையாக இலக்கினுள் அடித்து
ஆட்டத்தை 2-2 என்று சமன் செய்தார். இருப்பினும் ஆஸ்தேரிலியா அணி ஓயயவில்லை. தொடர்ந்து தாக்கியவண்ணமே இருந்தனர்.
68வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டிபே (Depay) காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்து எத்திய பந்து காப்பாளரை கடந்து இலக்கை அடைந்தது. இதன் மூலம் நெதர்லாந் 3-2 என்ற இலக்கு
கணக்கில் முன்னிலை வகித்தது. அதன் பிறகு ஆஸ்தேரிலியா அணியின் முயற்சிகள் அனைத்தையும் நெதர்லாந்து அணியினர் முறியடித்தனர்.
இதன் மூலம் நெதர்லாந்து அணி 3-2 என்ற இலக்கு கணக்கில் ஆஸ்தேரிலியா அணியை வெற்றிக்கொண்டு பிரிவில் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
பிரிவு - பி (க்ரூப் பி) புள்ளி விவரங்கள் கீழே:-
அடுத்த சுற்றுப்போட்டியில் நெதர்லாந்து அணி சிலி அணியையும், ஆஸ்தேரிலியா அணி ஸ்பெயின் அணியையும் எதிர்கொள்ளவிருக்கிறது.
No comments:
Post a Comment