உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு பி ஸ்பெயின் vs சிலி
WorlCup Football 2014 - Group b Spain Vs Chile
நடப்பு வாகையர் (சாம்பியன்) ஸ்பெயின் அணிக்கு வாழ்வா சாவா ஆட்டம்!!!!!!
பிரிவு 'பி'யில் இடம் பெற்ற ஸ்பெயின் அணியும், vs அணியும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பலப்பரீட்சை செய்தது. ஏற்கனவே ஆஸ்தேரிலியா அணியை 1-3 என்ற இலக்கு வித்தியாசத்தில் வென்ற சிலி அணி அதிக இலக்கு எடுத்து குழுவில் முதல் இடம்
பிடிக்கவும்,ஏற்கனவே நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற தோல்வியை தழுவி பி பிரிவில் கடைசி இடத்தில் இருக்கும் நடப்பு வாகையர் (சாம்பியன்) பட்டம் வென்ற ஸ்பெயின் அணி இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாட இந்த போட்டியில் வாழவா சாவா
என்ற நிலையில் இருக்கிறது. ஆதலால் அந்த அணி வெற்றிக்கொள்ளும் முனைப்போடு களம் இறங்கியது
ஆட்டம் துவங்கியவுடன் சிலி வீரர்கள் கிடைத்தை வாய்ப்பை ஸ்பெயின் வீரர் வெளியே அடித்ததின் மூலம் கிடைத்த கார்னரில் இலக்கு அடிக்க தவறிவிட்டனர். இந்த இலக்கு அடித்து இருந்தால் மிக குறைந்த நிமிடத்தில் அடித்த இலக்கு இதுவாக இருந்திருக்கும்.
30வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்து ஜஹாவி அலோன்ஸோ இலக்கினுள் அடிக்க முயன்ற பொழுது சிலி காப்பாளர் பிரேவோ அருமையாக தடுத்தார்.
இருபக்கமும் முன்னேறவும் தடுப்புகள வீரர்கள் தடுத்து திருப்புவதுமாக இருந்தது. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் அருமையான வாய்ப்பு சிலி அணியினருக்கு, சிறப்பான முறையில் வழங்கிய பந்தை இடுவார்டோ வர்காஸ் (Eduardo Vargas) சிறப்பான முறையில் இலக்கினுள் அடித்து
சிலி அணியை 1-0 என்ற இலக்கு கணக்கில் முன்னிலை வகிக்க வைத்தார்.
43வது நிமிடத்தில் சிலி வீரர் அலேசிஸ் சாஞ்சிஸ் உதைத்த பந்தை, காப்பாளர் காசியாஸ் குத்தி வெளியே தள்ளிய பந்து சிலியின் சி. அரங்குயிஸிடம் (C. Aránguiz) செல்ல, அதை தவறவிடாமல் இலக்கினுள் அடித்தார். இதன் மூலம் சிலி அணி 2-0 என்ற இலக்கு கணக்கில்
முன்னிலை பெற்றது. ஸ்பெயின் வெளியாவது உறுதி என்பது போல முதல் பாதி நிறைவடைந்தது.
இரண்டாவது பாதி தொடங்கி சிறிய நேரத்தில் ஸ்பெயினின் இனியாஸ்டா சிலியின் காப்பாளர் கட்டத்தினுள் நேர்த்தியாக வழங்கிய பந்தை இலக்கினுள் அடித்தார் டியாகோ கோஸ்டா, ஆனால் அதை தடுப்புகள வீரர்களின் முயற்சியால் வெளியே தள்ளப்பட்டது. ஸ்பெயினின்
ஆதிக்கம் இருந்தது இரண்டாவது பாதியில். இதில் தோற்றால் இந்த உலகக்கோப்பையில் இருந்து வெளியாவது உறுதியாகிவிடும், ஆதலால் முழு பலத்தையும் பயன்படுத்தினர் ஸ்பெயின் அணியினர். அடுத்த சில நிமிடங்களில் மிக மிக அருமையான வாய்ப்பை
புஸ்கேட்ஸ் தவறவிட்டுவிட்டார். இது அருமையான வாய்ப்பு. அவருக்கு நேரே இருந்தது இலக்கு, மேலும் சிலியின் தடுப்புக்கள வீரர்கள் யாரும் இல்லை. இருந்தும் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டனர் ஸ்பெயின் அணியினர்.
75வது நிமிடத்தில் அருமையான வாய்ப்பை சிலி வீரர்கள் இலக்கினுள் அடிக்க தவறிவிட்டனர். அடித்திருந்தால் ஸ்பெயின் வெளியாவது உறுதி என்று இருந்திருக்கும். இன்னமும் ஸ்பெயின் வீரர்கள் தங்கள் முழு திறமையையும் பயன்படுத்தி விளையாடினர்.
ஸ்பெயினின் உலகக்கோப்பை பயணத்தை நிர்ணயிக்கும் கடைசி 10 நிமிட ஆட்டங்கள். இனியாஸ்டா காப்பாளர் கட்டத்தின் வெளியே இருந்து அடித்த பந்தை அருமையாக தடுத்தார் சிலி காப்பாளர் பிராவோ. சிலி அணி பி பிரிவில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் இந்த உலககோப்பையில் தகுதிசுற்றோடு வெளியானது.
பிரிவு 'பி'யின் (க்ரூப் பி) புள்ளி விவரங்கள் கீழே:-
அடுத்த சுற்று போட்டியில் ஸ்பெயின் அணி ஆஸ்தேரிலியா அணியையும் (இரண்டு அணியினும் முன்னேறி போக இயலாது), சிலி அணி நெதர்லாந்து அணியையும் எதிர்கொள்ளவிருக்கின்றன (பிரிவில் முதலாவது இடத்திற்கான போட்டி).
No comments:
Post a Comment