இன்றைய குறள்

Thursday, June 19, 2014

உலக கோப்பை கால்பந்து 2014 - கேமரூன் vs குரேஷியா


உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு எ கேமரூன்  vs குரேஷியா
WorlCup Football 2014 - Group A Cameroon Vs Crotia

நடப்பு கால்பந்து உலககோப்பையில் முதல் இலக்கு குரேஷியா அணிக்கு கிடைத்தது. ஆனால் பிரேசில் அணியோடு நடந்த சென்ற சுற்று போட்டியில் 3-1 என்ற இலக்கு கணக்கில் தோற்றுப்போனது. அதேபோல கேமரூன் அணியும் மெக்சிகோ அணியிடம் 2-0 என்று தோற்றது.
இரண்டு அணிகளும் அடுத்த சுற்று போட்டிக்கு தங்களை தக்கவைக்க இந்த போட்டியை வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கின.

ஆட்டம் துவங்கியவுடன் கேமரூன் அணியினர் இலக்கு அடிக்க விரைந்தனர். 10 நிமிடங்கள் கழித்து ஒலிச் (Ivica Olic) நேர்த்தியான முறையில் இலக்கினுள் அடித்து குரேஷியாவை 1-0 என்ற இலக்கு கணக்கில் முன்னிலை வகிக்கவைத்தார்.

முதல் பாதி முடியவிருக்கும் 5 நிமிடங்கள் முன் சாங் (Song) என்ற கேமரூன் வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவர் இந்த ஆட்டமும், அடுத்து பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாட இயலாது. முதல் பாதியில் குரேஷியா
அணி 1-0 என்ற இலக்கு கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி துவங்கி 3வது நிமிடத்திலும், ஆட்டத்தின் 48வது நிம்டத்தில் பெரிசிக் (Ivan Perisic) இடது பக்கத்தில் இருந்து பந்தை கடத்தி வந்து இலக்கினுள் அடித்து குரேஷியா அணிக்கு வலு சேர்த்தார். இதன் மூலம் 0-2 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை வகித்து
கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது. இந்த போட்டியில் கேமரூன் தோற்கும் பட்ச்சத்தில் நிச்சயம் உலககோப்பையின் அடுத்த நிலைக்கு செல்லாது. 10வீரர்கள் மட்டுமே விளையாடுவதால் கேமரூன் அணி நிச்சயம் அடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்பில்லை.
60வது நிமிடத்தில் இடது பக்கத்தில் கார்னர் கிக் கிடைக்க, அந்த பந்தை மாரியோ மன்சுக்கிக் (Mario Mandzukic) தலையால் முட்டி இலக்கினுள் அடித்தார். 73வது நிமிடத்தில் எட்டோர்டோ (Eduardo') இலக்கை நோக்கி பந்தை உதைக்க, அதை கேமரூன் காப்பாளர் தடுத்தார். ஆனால் பந்து அருகாமையில் இருந்த மாரியோ மன்சுக்கிகிடம் செல்ல, அவர் இலக்கினுள் அடித்தார். மேலும் ஒரு கோல் குரேஷியா அணிக்கு.

இந்த ஆட்டத்தில் குரேஷியா அணி 4 - 0 என்ற இலக்கு கணக்கில் கமேரூன் அணியை வெற்றிபெற்று 3 புள்ளிகளை பெற்றது. அடுத்த சுற்று ஆட்டத்தில் குரேஷியா, மெக்சிகோ அணியை வெற்றிக்கொண்டால் நிச்சயம் அடுத்த 16 அணிகள் மோதும் சுற்றுக்கு (நாக் அவுட்)
முன்னேற முடியும்.

இரண்டு சுற்றுப்போட்டிகள் முடிவடைந்த பின் எ பிரிவில் (Group A) உள்ள அணிகளின் புள்ளி விவரங்கள் கீழே:



அடுத்த சுற்றில் கேமரூன் அணி பிரேசில் அணியையும், குரேஷியா அணி மெக்சிகோ அணியையும் எதிர்கொள்ளவிருக்கின்றன.

No comments:

Post a Comment

பழமொழி