உலகக்கோப்பை கால்பந்து 2014 பிரேசில் vs மெக்சிகோ
WorldCup FootBall 2014 Brasil Vs Mexico
பிரிவு 'எ'வில் இடம் பெற்ற பிரசில் மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. இரண்டு அணிகளும் தலா 3 புள்ளிகள் எடுத்து முறைய முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன. இரண்டு அணியும் குழுமத்தில் முதல் இடம் எடுக்க போராடியது.
சொந்த மண்ணில் ஆடுவதால் பிரேசில் அணிக்கும் சாதகமான ஒன்று. இருந்தாலும் மெக்சிகோ அணியினர் கடுமையாக போராடினர். பிரேசிலின் ஆதிக்கம் இருந்தாலும், தன் பங்கிற்கு மெக்சிகோ அணியினரும் தாக்குதலை அவ்வப்பொழுது
நடத்தினர். 27வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நெய்மார் (neymar) தலையால் முட்டி பந்தை இலக்கினுள் அடித்தார், அதை நேர்த்தியான முறையில் மெக்சிகோவின் காப்பாளர் ஒச்சொஹா (Ochhoa) தடுத்துவிட்டார். பந்து இலக்கு கோட்டை கடந்துவிட்டது, ஆனால் பந்து
கீழே வீழ்வதற்குள் காப்பாளர் தடுத்ததினால் பிரசில் அணிக்கு இலக்கு அடிக்கும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டது. எந்த அணியும் இலக்கு அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் இருந்தது.
34வது நிமிடத்தில் கிடைத்த கார்னர்கிக் மூலம் நெய்மார் பந்தை உதைக்க, அதை பிரெட் (Fred) தலையால் இலக்கினுள் அடித்தார், பந்து காப்பாளரிடம் தஞ்சம் புகுந்தது.
40வது நிமிடத்தில் மேசிகொவின் வீரர் வஸ்கஸ் (Vazquez) காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்து அடித்த பந்து இலக்கிற்கு அருகாமையில் வெளியே சென்றது. கிட்டத்தட்ட இலக்கினுள் சென்று விட்டது என்பது போல கடந்துசென்றது பந்து. அடுத்த இரண்டு நிமிடங்களில்
பிரேசில் அணியின் தாகுதலை மிக மிக அருமையாக முறையில் ஒச்சொஹாவால் தடுக்கப்பட்டது.
முதல் பாதி முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் இலக்கு எதுவும் அடிக்காமல் 0-0 என்று சமநிலையில் இருந்தன.
இரண்டாவது பாதி தொடங்கிய சற்று நேரத்தில் பிரேசிலுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு மெக்சிகோவின் தடுப்புகள வீரர் ரோத்ரிகசால் (Rodriguez) தடுக்கப்பட்டு வெளியதள்ளப்பட்டது. பந்தை அவர் தலையால் முட்டி வெளிய
தள்ளாவிட்டால், நிச்சயமாக நெய்மார் இலக்கினுள் அடித்திருப்பார். சிறப்பான ஒரு தடுப்பாட்டம்.
அடுத்த 10 நிமிடங்களில் மெக்சிகோ அணியின் ஆத்திக்கம் அதிகமாக இருந்தது. பந்தை இலக்கை நோக்கி எடுத்து செல்வதில் வேகம் காண்பித்தனர். மேலும் இலக்கை நோக்கை அவர்கள் அடித்த இரண்டு பந்துகள் இலக்கிற்கு சற்று உயரத்தில் சென்று வெளியானது.
அவை இரண்டுமே கிட்டத்தட்ட புகுந்துவிட்டது என்ற எண்ணம் தோன்றியது.
62வது நிமிடத்தில் 30 அடிதூரத்தில் கிடைத்த ப்ரீகிக் மூலம் கிடைத்த பந்தை கிட்டத்தட்ட இலக்கிற்கு அருகில் உதைத்தார் நெய்மார். சற்று வெளியே சென்றுவிட்டது பந்து. அடுத்த 4 நிமிடங்களில் பிரேசிலுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்து காப்பாளர் மற்றும்
தடுப்புகள வீரர்கள் மூலமாக தகர்த்தெறியப்பட்டது. நிச்சயம் இலக்கினுள் சென்று விடக்கூடியது அனைத்து தடுக்கப்பட்டது. கடந்து 10 நிமிடங்கள் ஆட்டத்தில் பிரேசிலின் ஆதிக்கம் இருந்தது. மெக்சிகோவின் தடுப்புகள வீரர்களோடு காப்பாளரின் கூட்டு முயற்சி இலக்கினுள்
பந்து நுழையாமல் பார்த்துக்கொண்டனர்.
75ஆவது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு அருமையான வாய்ப்பு பிரேசிலின் பெர்னாட்ற்கு (Bernard). அவருக்கு போதிய நேரமும் இருந்தது. பின்னால் மெக்சிகோவின் வீரர்கள் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் சற்று அவசரம் காண்பித்ததால் அந்த வாய்ப்பு பறிபோனது.
அடுத்த 5வது நிமிடத்தில் மெக்சிகோவிற்கு காப்பாளர் கட்டத்திற்கு வெளியே கிடைத்தபந்தை தவரவிட்டுவிட்டனர். அதே நேரத்தில் பந்து மெக்சிகோவின் இலக்கு நோக்கி எடுத்துசெல்ல்ப்பட்டது. நெய்மார் நேர்த்தியான முறையில் மெக்சிகோவின் காப்பாளர் கட்டத்தினுள்
அடிக்க, ஒச்சொஹா பிரேசில் வீரர் பந்தின் அருகில் வருவதற்குள் பந்தை பிடித்தார். மேலும் ஒரு முயற்சி தடுக்கப்பட்டது மெக்சிகோவின் காப்பாளர் மூலமாக.
கடைசி 5நிமிடங்கள், நெய்மார் அடித்த பந்தை தியாகோ சில்வா (T. Silva) பிரேசில் அணியின் தலைவர், தலையால் முட்டி இலக்குள் அடித்தார். கிட்டத்தட்ட இலக்கு என்று நினைத்த அந்த பந்தை மீண்டும் ஒரு முறை தடுத்தார் காப்பாளர் ஒச்சொஹா. நிச்சயமாக
இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் அவர் தான்.
ஆட்டத்தின் பரபரப்பான கடைசி நிமிடங்கள் மெக்சிகோ வீரர் எத்திய பந்து இலக்கை உரசிக்கொண்டு வெளியே சென்றது. கூடுதல் நேரத்தில் மெக்சிகோவின் ஹெர்னாண்டஸ் (Hernandez) அடித்த பந்தை பிரேசிலின் காப்பாளர் ஜூலியோ சீசர் (J. Ceaser) அருமையாக
தடுத்துவிட்டார். இதன் மூலம் ஆட்டம் 0 - 0 என்ற நிலையில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது. இந்த உலகக்கோப்பையில் இரண்டாவதாக சமநிலையில் முடிந்த ஆட்டம் இது.
எ பிரிவின் புள்ளிகள் விவரம் கீழே:-
அடுத்த சுற்றில் பிரேசில் கேமரூன் அணியையும், மெக்சிகோ குரேஷியா அணியையும் எதிர் கொள்ளவிருக்கின்றனர்.
No comments:
Post a Comment