கால்பந்து உலகக்கோப்பை 2014 பெல்ஜியம் vs அல்ஜீரியா
WorldCup FootBall 2014 Belgium Vs Algeria
உலககோப்பை கால்பந்து 2014 ஹச் பிரிவில் சற்றுமுன் நடைபெற்று முடிந்த முதல் சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் அணியும் அல்ஜீரியா அணியும் மோதின. இதில் அல்ஜீரியா அணி 1 - 0 என்ற இலக்கு கணக்கில் முதல் பாதியில் முன்னியினையில் இருந்தது.
இரு அணிகளும் சமபலத்துடனே மோதியது. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கிடைத்த பெனால்ட்டி கிக் மூலமாக பெல்ஜியம் அணி ஒரு இலக்கு அடித்தது.
இரண்டாம் பாதியில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது. அந்த அணியின் பெலைணி (fellaini) தலையால் முட்டி பந்தை இலக்கினுள் அடித்தார். இதன் மூலன் ஆட்டம் 1-1 என்று சமநிலையில் நகரத்தொடங்கியது.
தொடர்ந்து பெல்ஜியம் அணி தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தது. அல்ஜீரியாவின் தடுப்புகள வீரர்கள் தங்களுடைய திறன் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கவுண்டர் அட்டாக் மூலம் பெல்ஜியம் அணி மேலும் ஒரு இலக்கை அடித்தது. அந்த அணியின் வீரர் மேர்டன்ஸ் (mertens) கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பெல்ஜியம் அணியை 2-1 என்ற இலக்கு கணக்கில் முன்னிலை வகிக்கவைத்தார்.
83வது நிமிடத்தில் வலது பக்கத்தில் இருந்து வந்த பந்தை இலக்கினுள் அடித்தார் பெலைணி, கிட்டத்தட்ட இலக்கினுள் நுழைய சென்ற பந்தை அல்ஜீரியா காப்பாளர் அருமையாக தடுத்துவிட்டார்.
இதன் மூலம் பெல்ஜியம் அணி 2 - 1 என்ற இலக்கு கணக்கில் அல்ஜீரியா அணியை வெற்றிபெற்று 3 புள்ளிகளை பெற்றது.
பெல்ஜியம் அணி அடுத்த சுற்று போட்டியில் ரஷ்யாவையும், அல்ஜீரியா அணி அடுத்த சுற்று போட்டியில் தென்கொரியாவையும் எதிர்கொள்கின்றன.
No comments:
Post a Comment