உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2014 பிரிவு ஜி கானா vs யு.எஸ்.எ
FootBall worldcup 2014 - Group G - Ghana Vs USA
ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளான, கானாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அமேரிக்கா அணி 2-1 என்ற இலக்கு கணக்கில் கானா அணியை வென்றது.
முதல் பாதியிலேயே ஒரு இலக்கு அடித்த அமேரிக்கா அணி அதற்கு பிறகு முன்னேறி மேலும் ஒரு இலக்கு அடிக்க இயலவில்லை. இரண்டாம் பாதியில் கானாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதன் மூலம் 82வது நிமிடத்தில் அந்த அணி ஒரு இலக்கை அடித்தது.
ஆட்டம் சமநிலையில் இருந்த நேரத்தில் ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் அமெரிக்கா அணி மேலும் ஒரு இலக்கு அடித்து வெற்றியை உறுதிப்படுத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இப்பிரிவில் அமேரிக்கா அணி 3 புள்ளிகள் பெற்று, ஜெர்மனிக்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது.
No comments:
Post a Comment