இன்றைய குறள்

Monday, June 23, 2014

உலக கோப்பை கால்பந்து 2014 - பிரிவு (குரூப்) ஜி

உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு ஜி ஜெர்மனி Vs கானா, போர்ச்சுகல் vs அமெரிக்கா

World cup 2014 - Group G Germany vs Ghana, Portugal vs America

பிரிவு ஜியில் ஜெர்மனிக்கு எதிரான கானா ஆடிய ஆட்டம் இரு அணியினருக்கும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது. ஜெர்மனியிடம் கானா சமநிலை பெற்றது எல்லோருக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது.

அடுத்தது அமெரிக்கா vs போர்ச்சுகல், சென்ற ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 4-0 என்று பரிதாபமாக தோற்ற போர்ச்சுகல் அணி, வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற ஆட்டத்தில் அமெரிக்காவிடம் 2-2 என்ற இலக்கு கணக்கில் சமநிலை பெற்றது. போர்ச்சுகல் அணிக்கு கிட்டத்தட்ட அடுத்த நிலைக்கு செல்லும் கதவுகள் அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

இந்த பிரிவில் உள்ள அணிகளின் புள்ளி விவரங்கள் கீழே:-


இப்பிரிவில் கடைசி சுற்று ஆட்டத்தில் அமேரிக்கா அணி ஜெர்மனி அணியிடம் சமநிலை பெற்றது என்றால் நிச்சயம் அடுத்த நிலைக்கு சென்றுவிடும், அல்லது கானா போர்ச்சுகல் அணிகளுக்கிடையே ஆன ஆட்டம் சமநிலையில் முடிந்தாலும் அமெரிக்கா அடுத்த நிலைக்கு சென்று விடும். போர்ச்சுகல் அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் என்றால் கானா அணிக்கு எதிரான போட்டியில் நிறைய இலக்கு அடிக்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. 

No comments:

Post a Comment

பழமொழி