இன்றைய குறள்

Monday, June 23, 2014

உலக கோப்பை கால்பந்து 2014 - பிரிவு (குரூப்) எப்

உலககோப்பை கால்பந்து 2014 பிரிவு (குரூப்) எப் - அர்ஜென்டினா vs ஈரான், நைஜீரியா vs போசினியா

WorldCup Football 2014 Group F - Argentina Vs Iraan, Nigeria Vs Bosnia

அர்ஜென்டினா ஈரானும் போதிய ஆட்டத்தில் கிட்டத்தட்ட ஈரான் வெற்றிபெற்றுவிடும் என்பது போல ஆட்டம் இருந்தது. அர்ஜெண்டினாவின் காப்பாளர் தன்னுடைய திறமையால் அர்ஜென்டினவிற்கு எதிராக வீழவிருந்த இலக்குகளை தடுத்தார். கடைசிவரை 0-0 என்று சமநிலையில் இருந்தது ஆட்டம். கூடுதலாக வழங்கிய 4 நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் நம்பிக்கை நட்சத்திரம் லியோனல் மெஸி காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்து ஒரு இலக்கு அடித்து அர்ஜென்டினா அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். இந்த வெற்றி மூலம் அர்ஜென்டினா அணி அடுத்த நிலைக்கு தகுதிபெற்றது.

இப்பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் போஸ்னியா அணியை நைஜீரியா அணி 0-1 என்ற இலக்கு கணக்கில் வென்றது. இந்த வெற்றி மூலம் நைஜீரியா அணி அர்ஜென்டினா அணியுடன் சமநிலையில் ஆட்டத்தை முடித்தால் அடுத்த நிலைக்கு தகுதி பெற்றுவிடும் என்ற நிலையில் இருக்கிறது.

இவ்விரு ஆட்டங்கள் முடிவடைந்த பிறகு பிரிவு எப்பின் புள்ளி விவரங்கள்:-


அடுத்த சுற்று ஆட்டத்தில் நைஜீரியா அணி அர்ஜென்டினாவையும், ஈரான் போஸ்னியா அணியையும் எதிர்கொள்கிறது.

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.