இன்றைய குறள்

Saturday, June 21, 2014

உலக கோப்பை கால்பந்து 2014 - சுவிசர்லாந்து vs பிரான்ஸ்உலக கோப்பை கால்பந்து 2014 பிரிவு இ சுவிசர்லாந்து vs பிரான்ஸ்
worldcup football 2014 Group E Switzerland Vs Framce

உலகக்கோப்பை கால்பந்து க்ரூப் இ பிரிவில் சென்ற சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற சுவிசர்லாந்து அணியும், பிரான்ஸ் அணியும் இன்று களம் இறங்கின. இரண்டு அணிகளும் தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி
பிரிவில் முதல் இடத்திற்கு செல்லும். ஆகவே இரண்டு அணிகளும் வெற்றி பெரும் முனைப்போடு விளையாடியது.  ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கார்னர் கிக் மூலம் கிடைத்த பந்தை காப்பாளர் கட்டத்தினுள் அடிக்க, அதை தலையால் முட்டி இலக்கினுள்
அடித்தார் ஒலிவர் கிரௌட் ( Olivier Giroud). அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி பிளைஸ் மட்யுடி (Blaise Matuidi) ஒரு இலக்கு அடித்தார். இதன் மூலம் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில்பிரான்ஸ்
அணி 2-0 என்ற இலக்கு கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்ட்டி கிக் கிடைத்தது. அந்த அணியின் நம்பிக்கை நட்ச்சிரம் கரீம் பென்சிமா உதைத்தார், மிக மிக நேர்த்தியான முறையில் சுவிஸ் காப்பாளர் பெனஜ்லியோ (Benaglio) தடுத்துவிட்டார்.  ஆட்டத்தின் 40வது
நிமிடத்தில் மதெய்யு வல்புனா (Mathieu Valbuena) இடது பக்கத்தில் இருந்து வந்த பந்தை நேர்த்தியான முறையில் இலக்கினுள் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவடைந்த பொழுது பிரான்ஸ் அணி 3-0 என்ற இலக்கு கணக்கில் சுவிஸ் அணியோடு
நடந்த ஆட்டத்தில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் பிரான்ஸின் வீரர்கள் கரீம் பென்சிமா மற்றும் மௌசா சிசொகோ ஆளுக்கு ஒரு இலக்கு அடித்து அணியை 5-0 என்ற இலக்கு கணக்கில் முன்னிலை வகிக்க உதவினர். பிறகு ஆறுதலாக சுவிஸ் அணி 2 இலக்கு அடித்தனர்.

இந்த ஆட்டம் முடிவடைந்த நிலையில் பிரிவு டி (Group D) புள்ளி விவரங்கள் கீழே:-இப்பிரிவில் அடுத்த சுற்று ஆட்டத்தில் சுவிசர்லாந்து ஹோண்டோராஸ் அணியோடும், பிரான்ஸ், எகோடோர் அணியோடும் மோதவிருக்கின்றன

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.