உலக கோப்பை கால்பந்து 2014 பிரிவு டி இத்தாலி vs கோஸ்டாரிக்கா
worldcup football 2014 Group D Italy Vs Costarica
டெட் க்ரூப் என்று சொல்லக்கூடிய க்ரூப் டி பிரிவில் சென்ற சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற இத்தாலி அணியும், கோஸ்டாரிக்கா அணியும் இன்று களம் இறங்கின. இப்பிரிவில் முதல் இடம் பெற வேண்டும் என்ற முன்னைப்போடு இறங்கின. எந்த அணி வெற்றிபெருகிறதோ அவ்வணி
உலககோப்பையின் அடுத்த நிலைக்கு செல்வது உறுதியாகிவிடும். தோற்கும் அணி அடுத்த சுற்று ஆட்டத்தில் கடுமையாக போராட வேண்டியிருக்கும். ஆதலால் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்று இரண்டு அணியும் முயற்சி செய்தது. முதல் பாதி ஆட்டம் முடிவடையும்
பொழுது, இடது பக்கத்தில் இருந்து கோஸ்டாரிக்காவின் டியாஸ் பந்தை உதைக்க, மிதந்துவந்த அப்பந்தை ரூயிஸ் தலையால் முட்டி இலக்கினுள் அடித்து 1-0 என்ற இலக்கு கணக்கில் கோஸ்டாரிக்கா அணியை முன்னிலை வகிக்கவைத்தார்.
நிச்சயம் இத்தாலி வீரர்களுக்கு அதிர்ச்சியான சங்கதி. இரண்டாம் பாதியை தங்களுடைய முன்னிலை வீரர்களை களம் இறக்கியது. கசானோ இத்தாலி அணிக்காக உள்ளே இறங்கினார். இத்தாலி வீரர்களின் ஆட்டத்தில் மாறுதல் தெரிந்தது. காப்பாளர் கட்டத்திற்கு வெளியே
இருந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இத்தாலியின் பிர்லோ இலக்கினுள் அடிக்க மிக மிக அற்புதமாக கோஸ்டாரிகா காப்பாளர் நாவாஸ் தடுத்தார்.
ஆட்டம் முடிவடைந்த பொழுது இத்தாலி அணியால் ஒரு இலக்கு கூட அடிக்க முடியவில்லை. இந்த போட்டி மூலம் அடுத்த நிலைக்கு (round 16) கோஸ்டாரிக்கா தகுதி பெற்றது. இத்தாலி அடுத்த நிலைக்கு போகவேண்டும் என்றால் உருகுவே கூட மோதும்
ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றே தீர வேண்டும்
இந்த ஆட்டம் முடிவடைந்த நிலையில் பிரிவு டி (Group D) புள்ளி விவரங்கள் கீழே:-
இப்பிரிவில் அடுத்த சுற்று ஆட்டத்தில் இத்தாலி உருகுவே அணியோடும், கோஸ்டாரிக்கா இங்கிலாந்து அணியோடும் மோதவிருக்கின்றன
No comments:
Post a Comment