விருப்பமானவர்கள்
விரும்பியதை, மன
விருப்பத்தோடு
விகல்ப்பமில்லாமல் செய்யும் பொழுது,
விசித்திரமான நடத்தையால், என்னிடம்
விருப்பம் இல்லாமல்
விலகுகிறார்களோ என்ற ஐயம்,
விடைகொடு என்று, என்னிடம்
வினவுவது போல தோன்றுகிறது.
வித்தியாசமான
வினாக்கள் என்னுளே!
விடைதெரியாமல்
விழிக்கிறேன் நான்.
விடைகொடுக்க முடியாமலும்
விடைபெற முடியாமலும்
விந்தையான உலகில்
விபரம் அறியாதவன் போல்
விழிகள் கண்ணீரைச்சொறிய
விரக்த்தியின்
விளிம்பில்...........நான்
வெகு வெகு அருமை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும்
(கவிதைகளை விரக்தியை அல்ல )
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி உறவே...
Deleteகவிதை அருமை ..
ReplyDeleteஇவ்வளவு விரக்தி எழுத்திலா இல்லை எழுதியவர் மனத்திலா :?
எழுதியவர் மனதில் அத்தனை விரக்தி இருந்தால் என்னவாயிருக்கும் என்று விளக்க இயலவில்லை.
Deleteமிக்க நன்றி தோழர் keepsmile அவர்களே
கவிதை அருமை ..
ReplyDeleteநன்றி தோழமை Gvtha Vennila அவர்களே
Deleteவிரக்தி என்பது வீண் கற்பனையே! வானமே எல்லை என்று வாழ்பவர்களுக்கு விரக்தி என்றும் நாடுவதில்லை, இந்த கவிதையை எழுதியவருக்கு விரக்தியை விருந்தாக பரிசளித்தவர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும், ஆனால் இவருக்கு இவ்வுலகமே பறந்து விரிந்து கிடக்கிறது என்பது என் கருத்து.
ReplyDelete