கலையாதே அழகிய கனவே
நெடு நாள் ஆவல் இது
கிட்டும் இரவிற்கு
ஏங்கியதை விட இரந்தது அதிகம்
காத்திருந்து கிடைத்தற்கு
மதிப்பு அதிகம் என நானுனர்வேன்
விளையாட்டாக அல்ல
அதீத வாஞ்சையோடு
இருந்த
என் தவிப்பிற்கு
இயற்கையே சாட்சி
அந்நாள் இந்நாளோ
என்ற
கற்பனை கோட்டையை
நெஞ்சில் சுமந்து
கனவில் விளக்கேற்றினேன்....
ஏக்க புள்ளிகளுக்கு
வர்ணம் தீட்டி,
ஓவியமாக்கி,
மகிழ்ந்து காதலிக்கிறேன்
எனக்கு பிடித்த
வளர்பிறையை....
கனவே நீ
தேய்பிறையாகாமல்
என் கனவை வளர்த்துவிடு...
துணையோடு ஓவியத்தை
கனவிலாவது ரசிக்கவிடு
ஏக்கத்தில் காத்திருப்பது
கனவு நிறைவேற
மட்டுமல்ல........
என்னவரின் வருகைக்காகவும் தான்
அருமையான உணர்வின் வெளிப்பாடு ....நன்றி ..
ReplyDeleteஅருமை.... அருமை...!
ReplyDelete