இத்தனை காலம்
காத்திருப்பில்
புரியாத உணர்வு
உன்னிடம் பழகிய பொழுது
என்ன பேசுகிறேன்
என்றும் நினைவில் இல்லை
உன் தகவலில்லாத
பொழுது தவிக்கிறேன்,
உன் தகவலுக்காகவும்
ஏங்குகிறேன்.....
உன் குரல் கேட்ட பொழுது
குதூகலம் அடைக்கிறேன்....
எப்படி என்னுள் வந்தாய்
சிந்திக்கிறேன்!
ஆனால் ஒன்றும் புலப்படவில்லை...
அழகு என்ற சொல்லை
காதல் என்று சொல்லலாமா?
தெரியவில்லை....!
நித்தமும் பார்க்கும்
சங்கதிகள் இன்று மட்டும்
புதிதாக தெரியும் மாயம் என்ன?
உன்னிடம் பேச
நான்
சேகரித்த வார்த்தைகளோடு
வட்டியாக சில சேர்ந்துகொண்டன
சில நேரத்தில்
காற்றிலும் கரைந்து போயின
இன்று முதல் முறையாக
என்னிடம் நானே பேசுகிறேன்
ஏன் இப்படி?
இது தான் காதலா!
காதல் என்ற வார்த்தை கூட
பிடித்துப்போனது
உன்னை எனக்கு பிடித்ததனால்....
அட...
ReplyDelete