இன்றைய குறள்

Thursday, February 13, 2014

தொடக்கத்தில் முடிவு.....


உன்
பிம்பத்தின் நிழலால்
பிரமை
பிடித்தது எனக்கு, ஏனோ
பிடிக்காததும் பிடித்தது...!
பின்னணி அறியாமல்,
பிணம் நடக்கிறது எனவும்,
பிணி முற்றிவிட்டது எனவும்,
பின்னால் பேச்சுக்கள் தொடர்ந்தாலும்,
பிறரின் ஏளனங்களால்
பின்வாங்காமல்
பிடிப்போடு, உன் பெயரை
பிதற்றியபடி
பின் தொடர்கிறேன் நிழலை போல....

2 comments:

பழமொழி